(3353)

(3353)

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கினியன கண்டோம்,

தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுதுநின் றார்த்தும்,

வண்டார் தண்ணந்து ழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்,

பண்டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே.

 

பதவுரை

வண்டு ஆர்

(மது பானத்திற்காக) வண்டுகள் பொருந்திய

தண் அம் துழாயான்

குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான

மாதவன்

திருமாலினது

பூதங்கள்

பக்தர்கள்

மண் மேல்

இந்நிலத்திலே

பண்

இராசங்களை

பாடி நின்ற ஆடி

பாடிக்கொண்டு ஆடிக் கொண்டு

பரந்து

எங்கும் பரவி

திரிகின்றன

எங்கும் பரவி உலாவுகின்றனர்;

கண்ணுக்கு இனியன

(இப்படி) கண்ணுக்குப் பரமபோக்கயமான நிலைமைகளை

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்டோம்-;

தொண்டீர்  எல்லீரும்

பாகவதர்களான ஸகல பேர்களும்

வாரீர்

வாருங்கள்;

தொழுது தொழுது நின்று

நன்றாகவணங்கி

ஆர்த்தும்

ஆரவாரிப்போம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கண்டோங்கண்டோம்.) ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை யனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார். தம்மால் அழைக்கப்படுகின்றவர்கள் விரைந்து ஓடிவர ஆசைப்படுதற்குறுப்பாக. “கண்மோங் கண்டோங் கண்டோம்” என்று பெருமிடறு செய்கிறார்போலும். கீழே * நண்ணாதார் முறுவலிப்பவிலே “கொடுவுலகங் காட்டேலே” என்ற சொல்லும்படியாக அபகவதர்களைக்கண்ட கசப்புத்திர ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியைக் கண்ணாரக் காணப் பெறறோமென்கிறார் கண்ணுக்கினியன கண்டோம் என்று.

தொண்டீர்! எல்லோரும்வாரீர் = “மெய்யடியார்கள் தம் ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண்பயனாவதே” என்றும் “பேராளன் பேரோலும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்றும் பாகவத கோஷ்டியின் சுவடறிந்திருக்கு மவர்களே! நீங்கள் ஒருவர் தப்பாமல் கடுக வாருங்கள். எதற்காக வென்ன;

தொழுது தொழுத நின்று ஆர்த்தும் = இந்திரளைத் தொழுகைதானே பரம ப்ரயோஜனமன்றோ? ப்ரயோஜனத்துக்கொரு ப்ரயோஜனம் பண்ணுவோம் என்றபடி.

யாரைத்தொழுவது? என்ன; பின்னடிகளினால் விவரிக்கின்றார். எம்பெருமான் * தோளிணைமேலும் நம்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் தண்ணந்துழாய் புனைந்திருக்கு மழகையும் அதிலே வண்டுகள் மதுப்பருக ஆர்ந்திருக்கும்படியையும், அப்பெருமான் தான் திருவின்மணாளனாயிருந்து அடியாரை நோக்குகிறபடியையும் நல்ல இசைகளிலே இட்டுப்பாடித் தொண்டர்கள் ஸம்பிரம் பண்ணநின்றார்கள்; இக்காட்சியைக் காண வாருங்கள் என்றாயிற்று.

 

English Translation

We have seen sights that are sweet to the eyes, yes we have, yes we have! Come devotees, offer worship, praise and shout in joy.  The spirits of the Tulasi-wreathed Madavan are roaming the Earth. They are seen standing, singing panns and dancing everywhere.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top