(3352)
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்.
பதவுரை
|
பொலிக பொலிக பொலிக |
– |
வாழ்க! வாழ்க! வாழ்க! |
|
உயிர் |
– |
ஜீவராசிகளுக்குண்டான |
|
வல் |
– |
வலிதான |
|
நைந்த |
– |
அழிந்துபோன |
|
இங்கு |
– |
இவ்விபூதியில் |
|
நமனுக்கு |
– |
யமனுக்கு |
|
யாது ஒன்றும் இல்லை |
– |
ஒரு காரியமுமில்லை. |
|
கலியும் |
– |
கலிபுருஷனும் |
|
நெடும் |
– |
(விரைவில்) தொலையக்கூடும். |
|
கண்டு கொள்மின் |
– |
(அதை) ப்ரத்யக்ஷமாகக் காண்பீர்கள்; |
|
பூதங்கள் |
– |
பக்தர்கள் |
|
சாபம் |
– |
பாவமானது |
|
போயிற்று |
– |
தொலைந்தது; |
|
நலியும் |
– |
வருத்தத்தை விளைவிக்கக்கூடிய |
|
நரகமம் |
– |
நகரலோகங்களும் |
|
கடல் வண்ணன் |
– |
கடல்போன்ற நிறத்தையுடையவனான பகவானுடைய |
|
பூதங்கள் |
– |
பக்தர்கள் |
|
மண் மேல் |
– |
இந்நிலத்தில் |
|
மலிய புகுந்து |
– |
நிரம்பி |
|
இசை பாடி |
– |
இனிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு |
|
ஆடி உழிதர கண்டோம் |
– |
இங்குமங்கும் நடமாடக் காண்கிறோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பொலிக பொலிக.) இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேனுமென்று காப்பிடுகிறார். *** என்று வேதம் மும்முறை ஓதுமாபோலே இருக்கும் “பொலிக பொலிக பொலிக” என்று மும்முறை ஓதுகிறபடி.போயிற்று வல்லுயிர்ச்சாபம் = சாபம் என்கிறது பாபத்தை; அவசியம் அனுபவித்தே தீரவேண்டுகையாலே. ஆத்மாவைப்பற்றிக் கிடந்த அவித்யை முதலானவை தொலைந்துபோயினவென்றபடி.
நலியும் நரகமும் நைந்த = இனி நரகங்களை யநுபவிக்க ஆளில்லாமையாலே அவை புல்லெழுந்தொழிந்தனவென்கை. ‘நைந்த’ என்றது நைந்தன என்றபடி; அன்சாரியை பெறாத பலவின்பால் இறந்தகாலவினைமுற்று.
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை = யமன் ஆராய்ச்சி செய்வதற்கு இங்கு விஷயமொன்றுமில்லை. யமலோகம் புகுவார் இருந்தாலன்றோ அவன் கணக்குப் பார்க்கவேண்டுவது. “சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோள் பொறியொற்றி வைத்தவிலச்சினை மாற்றித் தூதுவரோடி யொளித்தார்” என்னும்படியாயிற்றென்கை.
கலியுங்கெடும் = கலிபுருஷனும் விரைவில் தொலைந்திடுவானென்கிறார். ஆசார்யஹ்ருதயத்தில் இரண்டாம் பிரகாரத்தில் “தமிழ் மாமுனிதிக்கு சரண்யமென்றவர்களாலே” என்கிற சூர்ணிகையில் “கலியுங்கொடும்போல ஸூசிதம்” என்விடத்திற்கு வியாக்கியான மருளிச்செய்யாநின்ற மணவாளமாமுனிகள் “இவர்தாம் மயர்வற மதிநலம் பெற்றவராகையாலே “கலியுங்கெடும்’ என்று- திருமங்கையாழ்வார் உடையவர்வோல்வார் அவதரித்துக் கலியுகஸ்வ பாவமும் கழியுமென்று மேல்வரும் அம்சத்தை தர்சித்து அருளிச்செய்தாப்போலே” என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத் தக்கன.
கண்டுகொண்மின் என்பதனால் இதில் ஸர்தேஹமில்லாமை கக்டப்பட்டதாகும். அநுபவத்தாலே அறியுமனுக்கு உபதேசம் வேணுமோவென்கை.
இப்படிச் சொல்வதற்குக் காரணம் இன்னதென்கிற்று. மேல்- கடல் வண்ணனென்று தொடங்கி, இதுவரையில் பாகவத ஸஞ்சாரமில்லாமையாலே வல்லுயிர்ச்சாபம் நிலைபெற்று, கலியும் நரகமும் மலிந்து, நமனுக்கும் விசேஷவிருந்து கிடைத்துக்கொண்டிருந்தது; இப்போது பாகவத ஸஞ்சாரம் மிகமிக வுண்டானபடியாலே “போயிற்று வல்லுயிர்ச்சாபம், நலியும் நரகமும் நைந்த,நமனுக்கு யாதொன்றுமில்லை, கலியுங்கெடும்” என்று உறுதிகூறத் தடையில்லையென்றபடி.
பூதங்கள் = வடமொழியில் *** (பூ – ஸத்தாயாம்) என்கிற தாதுவடியாகப் பிறந்தது பூதம் என்னுஞ்சொல். ஸத்தை பெற்றது என்று பொருள். எம்பெருமானது திருக்குணங்களை யநுபவித்தே ஸத்தை பெற்றவர்கள் என்றவாறு.
English Translation
Hail! Hail! Hail!, gone is the curse of existence. Hell has relented, Yama has no work here anymore, even Kali shall end, just see! The ocean-hued Lord’s spirits have descended on Earth in hordes. We have seen them singing and dancing everywhere
