(3320)
சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே,
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.
பதவுரை
|
சாம் ஆறும் |
– |
திடீரென்று மரண மடைவதும் |
|
கெடும் ஆறும் |
– |
பலவகைக்கஷ்டங்களையடைவதும் (இதுகாரணமாக) |
|
தமர் |
– |
தாயாதிகளும் |
|
உற்றார் |
– |
உறவினர்களும் |
|
தலைத்தலைப்பெய்து |
– |
ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து |
|
நான்காம்பத்து ஒன்பதாந்திருர்ய்மொழி |
– |
நண்ணுதாத்முறுலலிப்ப |
|
ஏமாறி கிடந்து அலற்றும் இவை உலகு இயற்கை என்ன |
– |
ஏங்கிக்கிடந்து கதலும் படியான இந்த லோக யாத்ரைகள் என்னே! |
|
அரவு அணையாய் அம்மானே! |
– |
சேஷசாயியான ஸ்வாமியே! |
|
நான் |
– |
அடியேன் |
|
ஆம் ஆறு ஒன்று அறியேன் |
– |
உய்யும்வகையைச் சிறிது மறிகின்றிலேன்; |
|
அடியேனை குறிக்கொண்டு கூம் ஆறு |
– |
இப்படிப்பட்ட அடியேனை திருவுள்ளம் பற்றி (திருவடிவாரத்திலே) அழைத்துக்கொள்ளும்படி |
|
விரை |
– |
விலைந்தருயவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “எண்ணுராத்துயர்” என்று ஸமுதாயமாகச் சொன்னதைச் சிறிது விவரித்து, இப்படி இவர்கள் படுகிறதுக்கங்களைப் போக்கியருளமாட்டாயாகில, என்னையாவது உன் திருவடிவாரத்திலே அழைத்துக்கொண்டருளவேணுமென்கிறர்.
சாமாறும்-வெகுநாளைக்கு ஜீவித்திருக்கப்போகிறதாகப் பாரித்திராநிற்கையில் இடி விழுந்தாற்போலே திடீரென்று ஸம்பவிக்கிற மரணமும். இவ்விடத்தில் “***” = ராத்ரிர் கமிஷ்யதி பவிஷ்;யதி ஸீப்ரபாதம் பாஸ்வாநுதேஷ்யதி ஹஸிஷ்யதி பங்கஜஸ்ரீ:இ இத்தம் விசிந்தயதி கோகதே த்விரேபே ஹாஹந்த! ஹந்த! நலிநீம் கஜ உஜ்ஜஹார.” என்கிற ச்லோகம் காணத்தக்கது. (இதன் கருத்து.) ஒரு வண்டானது மாலைப்பொழுதில் ஒரு தாமரை மலரினுள்ளே புகுந்து மதுப்பருகத்தொடங்கியது; ஸூரியன் அஸ்தமித்தலாறே மலர்மூடிக் கொண்டது; இரவெல்லாம் வண்டு அதனுள்ளேயே கிடக்கவேண்டியதாயிற்று; கிடக்கும்போது, இரவுகழிந்து பொழுது விடியப் போகியதென்றும் தாமரை மலரப் போகிறதென்றும், உடனே கிளம்பிச்சென்று குடும்பங்களோடே சேர்ந்து களிக்கப்பெறலாமென்றும் பாரித்துக்கொண்டிருந்தது; இருக்கையில், ஒரு காட்டானை திடீரென்று அத்தாமரையோடையிலிறங்கி அனைத்தையும் வேர் பறியாகப்பறித்துக் கபளீகரித்திட்டது என்கை. இந்தக்கணக்கிலே மனிசர்களுக்கு நேரும் மரணத்துன்பங்களும் பலபல.
கெடுமாறும் = பிறரைக் கெடுக்கவேணுமென்று கோலியிருக்குமவர்கள் தாங்களே கெட்டுப்போகிற விதங்களும் பலபல. ஒரு கள்வன் பிறர்மனையிலே புகுந்து திருடுவதாகச் சென்றன்; அங்கே அகத்துக்குடையார்சையிலே பிடியுண்டு பரிபவஙகள் பட்டுக்கிடக்கின்றன; அதுவுமன்றியில் மற்றெரு கள்வன் இவன்றன் வீட்டிலே புகுந்து ஏற்கனவே இவன் பலகாலமாகக் களவுகண்டு திரட்டிவைத்திருந்த பொருள்களைலெ;லாம் கவர்ந்து சென்றான். இப்படியாக உலகர் கெடுமாறுகள் வாசாமகோசரம்.
(தமருற்றர்இத்யாதி.) ஆழ்வார்க்குத் தமர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களேயாயிருப்பர்கள். உலகர்கள் சரீரஸம்பந்கைஷதப்பற்றிச் சிலரை ஞாதிகளென்றும் ஸம்பந்திகளென்றும் குலாவிப்போருவர்கள். அப்படிப்பட்ட உறவினர்கள் கீழ்ச்சொன்ன சாவுகளிலும் கேடுகளிலும் மேல்விழுந்து கிடந்து கூப்பாடு போடுவர்கள். ஆக இப்படிப்பட்ட உலரியற்கை என்னை! நெடுக ஜீவிக்க மநோரதியா நிற்கையில் முடிவது, நாலுகாசு கையிலேயுண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்றிருக்க அது கெட்டுப்போவது, தேஹபந்துக்களேயே தமக்கு ஸகலவித பந்துவுமாக நினைத்து இவற்றுக்கு ஒன்றுவந்தவாறே ‘பட்டேன்! செட்டேன்!’ என்று கூப்பிட்டு அலற்றுகிறது, ஆகிய இவையுமொரு லோகயாத்ரையே! என்று ஆச்சரியப்படுகிற்ராயிற்று.
இப்படிப்பட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! இவ்வுலகு எக்கேடு கெட்டால் உமக்கென்ன? அவர்களேப்போல் அலற்றும்படியான நிலைமையில் ; உம்மை நான் வைத்திருக்கவில்லையே!; என்னைச் சொல்லியலற்றும்படியாகவன்றே உம்மை நான் வைத்திருப்பது; தளராதே கொள்ளும்” என்றருளிச்செய்ய; ஆமாறு ஒன்றறியேன் நான் என்கிறர். இந்த ப்ரக்ருதி மண்டலத்திலே என்னை வைத்திருக்கிறயாகையாலே’ இது என்னை இனி எப்பாடு படுத்துமோவென்று மிக அஞ்சுகின்றேனென்கை. இந்த ஸம்ஸாரிகளுக்கும் உன்னேடு உறவு குறையற்றிருக்கவும் ப்ரக்ருதிக்கு வசப்பட்டிருத்தலாலன்றே உன்னேயிழந்து படுகிறர்கள்; அந்த ப்ரக்ருதியில்தானே நீ என்னையும் வைத்திருக்கிறது; “ஆற்றங்கரை வாழ்மரம்போல் அஞ்சுகின்றேன்” என்றும், “காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல் ஆற்றத்துளங்காநிற்பன்” என்றும், “பாம்போடொரு கூரையிலே பயின்றற்போல் தாங்காதுள்ளம் தள்ளும்” என்றும் “இருபாடொரி கொள்ளியினுள்ளெறும்பேபோல் உருகா நிற்குமென்னுள்ளம்” என்றும் ஞானிகள் கதரவேண்டும்படியான நிலத்திலே என்னை வைத்திருக்கையாலே இந்த ஸம்ஸாரிகளைப்போலே எனக்கும் என்ன ஆகுமோ! என்று அஞ்சவேண்டும்படியாயிராநின்றதே! என்றவாறு.
“ஆமாறென்று அறியேன் நான் என்ற விடத்தில் இன்னாருக்கு என்றில்லாமையாலே, இந்த ஸம்ஸாரிகளுக்கு ஆமாறு ஒன்று அறியேன் என்றுமுரைக்கலாம். இவர்களுக்கு இத்துயரம் நிங்கும் வழி அறிகின்றிலேன் என்க.
அரவு அணையாய்! திருவனந்தாழ்வானொருவனையே சென்றற்குடையாமிருந்தால் சிங்காசனமாம் இத்யாத்ப்படியே ஸகங்கர்யங்களுக்கும் உரியவனாகக் கொள்ள வேணுமென்றெரு நிர்ப்பந்த முண்டோவென்று கேட்கிறபடி.
கூமாறு-கூவுமாறு என்றபடி. என்;னை நீ அழைத்துக் கொள்ளும்படியாக என்கை. இவ்விபூதியிலே இங்ஙனே கதறுகிறவன் நானொருவனே யல்லது வேறெருவருமில்லை; ஆசையாலே என்னைப்பற்றி விகேஷத்துத் திருவுள்ளம்பற்ற வேணுமென்கிறார் அடியேனைக் குறிக்கொண்டே என்று.
English Translation
Kith and kin heap destruction and death, cheat each other, fall and weep; what ways are these? O Lord on serpent couch, I see no way for myself. Heed my prayer, find a way and call me unto you, quick!
