(3314)

(3314)

கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,

கிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த,

வளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல,

வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே.

 

பதவுரை

கிளர்ஒளியால் குறைவு இல்லா

கிளர்கின்ற தேஜஸ்ஸூ நிரம்பப் பெற்ற

அரி உரு ஆய்

நரசிங்கமூர்த்தியாய்

கிளர்ந்து எழுந்து

சீறிக்கொண்டு தோன்றி,

கிளர் ஒளிய இரணியனது

மிக்கதேக பொருந்திய இரணியனுடைய

அகல் மார்பம்

விசாலமான மார்பை

கிழித்து உகந்த

இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்தவனும்,

வளர் ஒளிய

வளர்கின்ற ஜ்வாலையையுடைய

கனல்

நெருப்புப் போலேயிருக்கிற

ஆழி

சக்கரத்தையும்

வலம்புரியன்

சங்கையுமுடையவனும்,

நீலம் மணி வளர் ஒளியான்

நீலரத்னம் போன்று விளங்குகின்ற திருமேனி விளக்கத்தை யுடையனுமான பெருமான்

கவராத

விரும்பாத

வரி வளையால் குறைவு இலம்

அழகிய வளையில் அபேக்ஷ யுடையோமல்லோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கிளரொளியால்.) ஆச்ரிதவிரோதியான இரணியனைப் பிளந்தொழிந்த நரஸிம்ஹன் விரும்பாத வளை எனக்கு வேண்டாவென்கிறாள்.-கிளர்ந்த வொளி குறைவின்றிக்கேயிருக்கிற நரஸிம்ஹமூர்த்தியாய்ச் சீறிக்கொண்டு தோற்றி இரணியனுடைய அகன்ற மார்வைக்கிழித்து ‘சிறுக்கனுடைய விரோதி தொலையப் பெற்றோம்’ என்று திருவுள்ள மூவந்தவன்.

வளரொளிய கனலாழி வலம்புரியன்-இரணியனது உடல் நலஸிம்ஹனுடைய திருநகருங்களுக்கே இரைபோரப் பெறாமையாலே திவ்யாயுதங்களுக்கு இங்குக் காரியமேயில்லையாயிற்று: ‘இங்கு நமக்கு ஒன்றும் இரைகிடைக்கவில்லையே!’ என்கிற சீற்றத்தினால் சங்கும் சக்கரமும் வயிறெரிகிறபடி.

அப்படிப்பட்ட எம்பெருமான் விரும்பாத-(அதாவது) அவன் வாங்கித் தன் கையில் இட்டுக்கொள்ளாத வளை எனக்கு வேண்டா என்றாளாயிற்று.

 

English Translation

He burst forth as a fierce lion-form exuding immense power, and tore apart the radiant wide chest of Hiranaya with relish, He bears the resplendent discus and conch.  If he does not desire my jewelled bangles, we have nothing to lose

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top