(329)
நாந்தகம் சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்துபெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க
வேந்தர்தலைவஞ் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர்.
பதவுரை
| நாந்தகம் |
– |
நந்தகம் என்னும் வாளையும் |
| சங்கு |
– |
ஸ்ரீபாஞ்ச ஐக்யத்தையும் |
| தண்டு |
– |
கௌமோதகி என்னும் கதையையும் |
| நாண் ஒலி |
– |
நாண் கோஷத்தையுடைய |
| சார்ங்கம் |
– |
ஸ்ரீசார்ங்க ததுஸ்னையும் |
| திரு சக்கரம் |
– |
திருவாழியாழ்வானையும் |
| ஏந்து பெருமை இராமன் |
– |
(திருக்கைகளில்) ஏந்தும்படியான பெருமையையுடைய இராமபிரான் |
|
இருக்கும் இடம் நாடுதிர் எல் |
||
| காந்தன் முகிழ் விரல் சீதைக்கு ஆகி |
– |
செங்காந்தளம்பு போன்ற விரல்களையுடைய பிராட்டிக்காக |
| வேந்தர் தலைவன் |
– |
ராஜாதிராஜனான |
| சனகராசன் தன் |
– |
ஜனகசக்கரவர்த்தியினுடைய |
| வேள்வியில் |
– |
யஜ்ஞவாடத்திலே |
| சென்று |
– |
எழுந்தருளி |
| கடுசிலை |
– |
வலிய வில்லை |
| இறுக்க கண்டார் உளர் |
– |
முறிக்கக் கண்டவர்கள் இருக்கின்றனர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பஞ்சாயுதங்களைத் திருக்கையிற் கொள்ளும் பெருமை பொருந்திய பெருமாளைத் தேடுகின்றமை முன்னடிகளில் விளங்கும். ஜநகமஹாராஜன் கந்யாசுல்கமாக வைத்து ருத்ரதநுஸ்ஸை அவனது யஜ்ஞவாடத்தேறவந்து முறிக்கும்போது அப்பெருமானைக் கண்டாருண்டென்பது, பின்னடி நாந்தகம்.கட்டல் விகாரம், இராமனை- ஐ- அசை, செங்காந்தளரும்பு – விரல்களின் செம்மைக்கு உவமையென்க. ஆதி- ஆக என்னும் எச்சரித்திரிபு … (உ)
English Translation
Are you in search of the abode of Rama of matchless fame, wielding the conch, discus, mace, dagger, and bow? There are many who saw him break the great bow for the sake of petal soft-fingers Sita, in the great sacrifice of Emperor Janaka.
