(3283)
வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும், எண்டிசை யும்தவி ராதுநின் றான்தன்னை,
கூனற்சங் கத்தடக் கையவனைக் குடமாடியை வானக்
கோனைக், கவிசொல்ல வல்லேற் கினிமா றுண்டோ?
பதவுரை
|
வானத்தும் |
– |
ஸ்வர்க்கத்திலும் |
|
உள்வானத்து உம்பரும் |
– |
அதுக்குள்ளாகப் பெரியதாயிருக்கிற மஹர்லோகாதிகளிலும் |
|
மண்ணுள்ளும் |
– |
பூமிக்குள்ளும் |
|
மண்ணின் கீழ் தானத்தும் |
– |
பூமியின் கீழ் இருக்கிற பாதாள உலகத்திலும் |
|
எண் திசையும் |
– |
இவற்றிலுண்டான எட்டுவிதமான பதார்த்தங்களிலும் |
|
தவிராது |
– |
ஒன்றிலும் வழுவாதபடி |
|
நின்றான் தன்னை |
– |
வ்யாபித்து நிற்பவனும் |
|
கூன் நல் சங்கம் |
– |
வளைந்தவடிவால் அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை |
|
தட கையவனை |
– |
பெரிய திருக்கையிலுடையவனும் |
|
குடம் ஆடியை |
– |
குடக்கூத்தினாலே ஸகல ஜனங்களையும் வசீகரித்தவனும் |
|
வானம் கோனை |
– |
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான ஸர்வேச்வரன் வியத்திலே |
|
கவி சொல்ல வல்லேற்கு |
– |
கவி பாடவல்ல எனக்கு |
|
இனி மாறு உண்டே |
– |
இனி எதிர் உண்டோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டு ஆழ்வாருடைய ஸர்வவிலாக்ஷ்ணமான பெருமையைக் காட்டுகின்றது. பரமபதத்திலுள்ள நித்யர்களென்ன. முக்தர்களென்ன, இவ்விபூதியிலுள்ள பராசர பாராசர்ய வால்மீகி ப்ரப்ருதிகளான மஹரிகளென்ன, ஆகிய இவர்களெல்லாரிற் காட்டிலும் ஆழ்வார்க்குண்டான வைலக்ஷ்ண்யம் இப்பாசுரத்தில் வெளியாகின்றது. எம்பெருமானுடைய பரவ்யூஹவிபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்களென்ற எல்லா நிலைமைகளிலும் புக்குக் கவிசொல்லவல்ல வெனக்கு எதிருண்டோ வென்கிறார்.
நித்யமுக்தர்கள் பரத்வமல்லது வேறொன்றையும் அறியார்கள். மஹர்ஷிகளில் வந்தால், பராசுர பகவானும் வேதவ்யாஸபகவானும் க்ருணாவதாரமல்லது மற்றொன்று அறியார்கள். வால்மீகி பகவான் ஸ்ரீராமாவதாரமன்றி யறியான். ஸநக ஸநந்தநாதிகள் அந்தர்யாமித்வத்திலே அதிகமாக ஊன்றியிருப்பார்கள். இங்ஙனே பார்க்குமிடத்து ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பாழியாயிருக்கும். நம்மாழ்வாருடைய தன்மை இங்ஙனனேயன்று; வானத்தும் வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்தானத்தும் எண்டிசையும் தவிராது நின்றானைக் கவிபாடுபவாராயிற்றிவர். இங்கு விசேஷணாம்ஸங்களில் முழுநோக்கு. விசேய பூதனான எம்பெருமான விஷயத்தில் கவிபாடுதல் மற்றவர்கட்கும் உள்ளதேயானாலும், விசேஷணாம்ஸங்களிலே தனித்தனியே புகுந்து அவ்வோ நிலைமைகளுக்கும் கவிபாடுதல் ஆழ்வா ரொருவர்க்கேயா மித்தனை.
முன்னிரண்டடிகளாலே எம்பெருமானுடைய ஸர்வவ்யாபகத்வம் சொல்லப்படுகிறது. இந்த வ்யாப்தியை மற்றையோர்கள் பேசுவதிற் காட்டிலும் ஆழ்வார் பேசுவதிலே சுவை மிக்கிருக்கும். “பரந்த தண்பரவையுள் நீர்தொறும் பரந்துளன்” என்பது முதலான பாசுரங்கள் காண்க.
எம்பெருமானுடைய வ்யாப்தி விஷயத்திலே சிலர்விப்ரதிபத்தி பண்ணிப்போருவர்கள். அணுவான பதார்த்தங்களிலே எம்பெருமானுக்கு உள்ளீடாக வ்யாப்தி ஸம்பவிக்க மாட்டாதென்றும், ஒரு பதார்த்தத்திலே அவனுக்குப் பரிபூரண வ்யாப்தியை அங்கிகரிக்குமளவில் மற்றொரு பதார்த்தத்தில் வியாபிக்க ப்ரஸக்தியில்லாமையாலே பரிஸமாப்ய வ்யாப்தியை அங்கீகரிக்கலாகாதென்றும் இங்ஙனே சில விப்ரதிபத்திகளைப் பண்ணாநிற்பர்கள். இவற்றுக்கெல்லாம் பரிஹாரமாக ப்ரஹ்மவ்யாப்தி பரிக்ரியா என்கிற வடமொழி க்ரந்தம் இயற்றியுள்ளோம்; அதிலே பரக்கக் கண்டு கொள்வது.
கூனல் சங்கத் தடக்கையவனை=முன்னிரண்டிகளிற் சொல்லியபடி எங்கும் வியாபித்து நிற்கிறவன் அடியவர்களைக் காத்தற்பொருட்டு மநுயஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும்படி சொல்லுகிறது. இங்குச் சங்கை சொன்னது சக்கரத்திற்கும் உபலக்ஷ்ணம். கண்ணனாய்த் திருவவதரிக்கும் போது திருவாழி திருச்சங்கோடே வந்து பிறந்தமை அறியத்தக்கது. “ஜாதோஸி தேவதேவஸ! ஸஙகசக்ர கதாதர!* என்ற வஸூதேவர் வார்த்தையும் காண்க.
குடமாடியை யென்று குடக்கூத்தைச் சொன்னது கிருணாவதார சேதங்களுக்கெல்லாம் உபலக்ஷ்ணம். இங்ஙனே கிருணாவதாரத்தைத் தெரிவித்தது மற்றுமுள்ள விபவாவதாரங்களுக்கெல்லாம் உபலக்ஷ்ணம். இங்ஙனே கிருணவதாரத்தைத் தெரிவித்தது மற்றுமுள்ள விபவாதாரக்களுக்கெல்லாம் உபலக்ஷ்ணம்.
வானக்கோனை=ஓர் ஊரளவன்றியிலே ஒரு நாட்டுக்காகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறபடி. பரவ்யூஹ விபவாந்தர்யாம் யர்ச்சவதாரமென்கிற ஐந்தனுள் மூன்று இப்பாட்டில் சொல்லப்பட்டன: திருவாய்மொழி அர்ச்சாவதார வேதமாதலால் அர்ச்சாவதாரத்தை விசேஷித்து எடுக்கவேண்டா. வியூஹத்தைப்பற்றிச் சொல்லவேண்டுவது அதிக மில்லையென்று திருவுள்ளம்.
“எம்பெருமான்றன்னைக் கவிசொல்லவல்ல என்னோ டொக்குமோ ஸர்வேச்வரனான எம்பெருமான்தானும்” என்பறு ஆறாயிரப்படியருளிச் செயல்.
English Translation
In Heaven and in the worlds above, on Earth and in the worlds below, he stands without fail. His strong hand folds over a coiled conch. He is the Lord of the celestials, he danced with pots. I have sung his praise. Now can there ever be one equal to me?
