(3239)
படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.
பதவுரை
|
படி மன்னு |
– |
பரம்பரையாய் வருகின்ற |
|
பல் கலன் |
– |
பலபல ஆபரணங்களையும் |
|
பற்றோடு அறுத்து |
– |
ஸவாஸநமாகவிட்டவர்களாய் |
|
ஐம்புலன் |
– |
பஞ்சேந்திரியங்களையும் |
|
வென்று |
– |
வசப்படுத்தினவர்களாய் |
|
செடி மன்னு |
– |
தூறுமண்டிக்கிடக்கும்படியாக |
|
காயம் |
– |
சரீரத்தை |
|
செற்றார்களும் |
– |
தவவிரதங்களால் வெறுக்கின்றவர்களும் |
|
ஆங்கு |
– |
அவ்விஷயத்தில் |
|
ஆவனை இல்லார் |
– |
அந்த எம்பெருமபானை ஆச்ரயித்தலில்லாதவர்கள் |
|
குடி மன்னும் |
– |
வெகுகாலம் நிலைபெற்றிருக்கும்படியான |
|
இன் சுவர்க்கம் |
– |
இனிமையான சுவர்க்கத்தை |
|
எய்தியும் மீன்வர்கள் |
– |
அடைந்தும் திரும்புவர்கள்; (ஆதலால்) |
|
கொடிமன்னு புள் உடை |
– |
கருடத்வஜனான |
|
அண்ணல் |
– |
ஸ்வாமியினுடைய |
|
கழல்கள் |
– |
திருவடிகளை |
|
குறுகுமின் |
– |
கிட்டுங்கள்; (அப்படியாயின்) |
|
மீள்வு இல்லை |
– |
என்று மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாசுரங்களில் இஹலோகஸுகங்களின் ஹேயத்வத்தை அருளிச்செய்துவந்தார். இனி இரண்டு பாசுரங்களில், ஸ்வர்க்கலோக போகத்தினுடையவும் ஹேயத்வத்தையருளிச் செய்வாராய், இப்பாட்டில் ஸ்வர்க்க தவம்புரியுங்காலை நிலையை ஒன்றரையடியாலருளிச் செய்கிறார். படிமன்னு பல்கலன் பற்றோடறுப்பதாவது-குல பரம்பரையாகத் தங்களுக்குக் கிடைத்த ஆபரணம் முதலிய சிறப்புக்களை அடியோடு துறப்பதாம். ஸ்வர்க்கலோகத்தில் அளவிறந்த போகங்களை அனுபவிக்கப்பெறவேணுமென்னும் நசையால் இஹலோகபோகங்களை வெறுக்கிறபடி, “ஊன்வாடவுண்ணாது உயிர்க்காவலிட்டு உடலிற் பிரியாப்புலனைந்தும் நொந்து தான் வாட வாடத் தவம்செய்ய” என்றும். “காயோட நீடுகனியுண்டு வீசுகடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயூடுநின்று தவஞ்செய்ய” என்றும், “வீழ்கனியு மூழிலையும் என்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தித் தன்னுமிலைக்குரம்பைத் துஞ்சியும், செஞ்சுடரோன் மன்னு மழல்நுகர்ந்தும் வெண்தடத்தினுட்கிடந்தும்” என்றும். “காயிலைதின்றுங் கானிலுறைந்துங்கதிதேடித் தீயிடைநின்றும் பூவலம் வந்தும்” என்றுஞ் சொல்லுகிறபடியேயிருந்து கடுந்தவம் புரிகின்றவர்கள் படிமன்னுபல்கலன் பற்றோடறுத்தவர்களாயும் ஐம்புலன் வென்றவர்களாயும் செடி மன்னுதாயஞ் செற்றார்களாயுமிருப்பர்களாயிற்று.
செடிமன்னு காயம் சொற்றார்கள் -உடம்பிலே தூறுமண்டும்படியிருப்பவர்கள் என்றபடி. தவத்திற்காக நெடுங்காலம் ஒவ்வொரு ஆஸனத்திலிருந்தால் சலியாமையாலே உடம்பிலே தூறுமண்டிவிடும். இங்கே “நெறியார் குழற்கற்றை முன்னின்று பின் தாழ்ந்து, அறியாதிளங்கிரி யென்றெண்ணிப்-பிரியாது, பூங்கொடிகள் வைகும் பொருபுனற் குன்றென்னும், வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு” என்ற பூதத்தாழ்வார் பாசுரம் நினைக்கத்தகும். (இதன் கருத்தாவது-) திருமலையேறும் வழியில் பலர்வீற்றிருந்து எம்பெருமானை நோக்கித் தவம்புரிகின்றனர்: அப்போது, மூச்சுவிடுதல், உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றுஞ்செய்யாதே வால்மீகி முதலிய மஹர்ஷிகளைப்போலே யிருந்ததனால் அவர்களது கூந்தற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்திருக்கவே, பூங்கொடிகளானவை அந்தக் கூந்தலின்மேலே படர்கின்றனவாம். பண்டு வான்மீகிமுனிவர்மீது புற்று மூடினாப்போலே இந்த பக்தர்களின்மீதும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமான வொரு காட்சியாக அமைந்தது-என்பதாம்.
இவ்வண்ணமாகக் கடுந்தவம் புரிந்தவர்கள் பகவத்ப்ராப்தியையே உத்தேச்ய மாகக்கொண்டு தவம்புரிந்தவர்களாயின் நன்றே; இல்லையேல் சுவர்க்கம் சென்றிருந்து “க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விசந்தி” என்கிறபடியே புண்யம் க்ஷயித்தவுடனே கீழே தலைகீழாகத் தள்ளப்பட்டு விழுந்தொழிவர்கள். “பின்னையித்திசைக்கென்றும் புணைக்கொடுக்கினும் போகவொட்டாரே” என்னும்படி மீள்வில்லாத மஹா புருஷார்த்தத்தைப் பெறவேண்டி யிருந்தீர்களாயின் கருளக்கொடி யொன்றுடைய பெருமானது திருவடிகளைப் பணிவது நன்று என்றாராயிற்று.
குறுகுதல் -அணுகுதல்
English Translation
Even those who cut attachments, tame their senses, and mortify their bodies, -till weeds grow on them, -are left without a goal; they enjoy a spell of heaven, then return. Reach for the Garuda-banner Lord and then there is no return
