(3190)

(3190)

உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன்

புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும்பல் கலன்,

நடையா வுடைத்திரு நாரணன் தொண்டர்தொண் டர்க்கண்டீர்,

இடையார் பிறப்பி டைதோறெமக் கெம்பெரு மக்களே.

 

பதவுரை

உடை ஆர்ந்த ஆடையன்

திருவரைக்குத் தகுதியான திருப்பரிவட்டத்தையுடையவனும்

கண்டிகையன்

கண்ட பூஷணத்தையுடையவனும்

உடை நாணினன்

திருப்பரிவட்டத்தின் மேல் சாத்தின திருவரை நாணையுடையவனும்

புடை ஆர்

ஸந்நிவேசமமைந்த

பொன் நூலினன்

பொற்பூணூலை யுடையவனும்

பொன் முடியன்

அழகிய திருமுடியையுடையவனும்

மற்றும் பல் கலன்

மற்றும் பலவகைப்பட்ட ஆபரணங்களையும்

நடையா உடை

இயற்கையாக உடையவனுமான

திரு நாரணன்

ஸ்ரீமந்நாராயணனுக்கு

தொண்டர்

அடியரானார்க்கம் அடியரானவர்

இடை ஆர்

நிரந்தரமான

பிற்ப்பிடை தோறு

பிறவிதோறும்

எமக்கு

எங்களுக்கு

எம் பெரு மக்கள் கண்டீர்

எவ்வளவோ சிறந்தவர்களாவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  திருவரை பூத்தாற்போலே யிருக்கிற திருப்பீதாம்பரத்தை யணிந்தவனாய், திருக்கழுத்திலே சாத்தும் திவ்யாபரணங்களையுடையனாய், அழகிய அரைநூல் மாலையை யணிந்தவனாய், ஒரு பக்கத்திற்கு வேறொரு ஆபரணம் வேண்டாதபடி தானே போருமாய், காளமேகத்திலே மின்னினாயப்போலே யிருக்கிற யஜ்ஞோப வீதத்தையுடையவனாய், ஆச்ரிதரக்ஷணத்திற்கு முடிகவித்திருப்பவனாய், மற்றம் எண்ணிறந்த திருவாபரணங்களை இயற்கையாகவே அணிந்துள்ளவனான ஸ்ரீமந்நாராயணனுக்கு தாஸாநுதாஸர்களாயிருக்குமவர்கள் பிறவிவேதாறும் எமக்கு அஸாதாரண சேஷிகளாவர்கள் என்றாராயிற்று.

“உடையார்ந்த வாடையன்” என்றவிடத்து “தாஸாமாவிசபூத் சௌரி: ஸ்மயமாந முகாம்புஜா; பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத்மந்மதமந்மத:” என்கிற ஸ்ரீபாகவத ச்லோகத்தை நம்பிள்ளை வெகு அழகாக வியாக்கியானித்தருளுகிறார்.

கண்டிகையான் என்றவிடத்து ஈடு:- “கூறையுடையழக மேலே யெழ வீசிப்போகா நிற்க, நடுவே வழிபறித்துக் கொள்ளும் திருக்கழுத்திலாபரணம் இவரைமடி பிடித்துகொண்டு போயக் கழுத்தளவு ஸௌந்தர்யத்திலே நிறுத்திற்று” என்பதாம். இந்த ஸ்ரீஸூக்தியின் சுவை ரஸிகர்களால் சுவைக்கத்தக்கதத்தனை.

“கண்டிகையன்” என்று திருக்கழுத்தினழகிலே யீடுபட்டு அநுபவியா நிற்க “உடை நாணினன்” என்று மீண்டும் கீழேயிறங்கி அநுபவிக்கும்படி எங்ஙனே? என்று சங்கை பிறக்க, அதற்கு நம்பிள்ளை அருளிச் செய்கிறார் காண்மின்- “கழுத்தே கட்டளையாக அநுபவியா நிற்க, கண்டகதமான ஸௌந்தர்ய தரங்கங்கள் கீழே பொரவீச நடுவேநின்று அநுபவிக்கிறார்” என்று.  “புடையார் பொன்னூலினன்” என்றவிடத்து- “இந்த ஸௌந்தர்ய ஸாகரத்தின் நடுவே அலையப்புக்காவாறே தமக்கு ஆலம்பனமாக ஒருநூலைப் பற்றினார்காணும்” என்றருளியுள்ள ஸ்ரீஸூக்தி பரமபோக்யம்.

 

English Translation

My Lord wears a necklace, waist belt and yellow robes, a splendid golden thread a golden crown and many ornaments.  Those who serve the servants of his devotees are my masters through every life, just see!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top