(3180)

(3180)

திரியும் கற்றொ டகல்வி சும்பு திணிந்த மண்கிடந் தகடல்,

எரியும் தீயொ டிருசு டர்தெய்வம், மற்றும் மற்றும் முற்றுமாய்,

கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,

சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள் சுடர்மு டியண்ணல் தோற்றமே.

 

பதவுரை

கரிய மேனி

சாமளமான வடிவை யுடையனாய்

செய்ய தாமரை கண்ணன்

செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையனாய்

விண்ணோர் இறை

நித்யஸூரி நாதனாய்

சுரியும் பல் கரு குஞ்சி

சுருண்டு அலகலகாய்க் கருமையாகிறகுழற் கற்றையையுடையனாய்

சுடர் முடி

ஒளி பொருந்திய திருமுடியையுடையனாய்

எங்கள் அண்ணல்

எமக்கு ஸ்வாமியான

கண்ணன் தோற்றம் திரியும் காற்றோடு

கண்ணபிரானடைய  விளக்கமானது, இடையறாது உலாவுகின்ற வாயு வென்ன

அகல்

விசாலமான

விசும்பு

ஆகாசமென்ன

திணிந்த

கடினமான

மண்

பூமியென்ன

கிடந்த

கரைகடவாமல் கிடந்த

கடல்

ஸமுத்ரமென்ன

எரியும்

ஜ்வலிக்கிற

தீயோடு

அக்னி யென்ன

இரு சுடர்

சந்திர ஸூரியர்களென்ன

தெய்வம்

(மற்றுள்ள)

மற்றும்

மற்றுள்ள மானிடர்களென்ன

மற்றும்

மற்றுள்ள திர்யக் ஸ்தாவரம் முதலியவைகளென்ன (ஆகிய)

முற்றும் ஆய்

ஸகலஸ்வரூப மாயிருக்கும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானுடைய விபூதிவிஸ்தாரங்களை அநுபவித்துப்பேசுகிறார். திரியுமென்ற தொடங்கி “எரியுந்தீயோடு” என்னுமளவும் பஞ்ச பூதங்கள் பேசப்பட்டன. இப்பஞ்ச பூதங்களும் எம்பெருமானிட்ட வழக்கு. சந்திரன் ஸூர்யன் முதலான தேவர்களும் மனிதர்களும் விலங்குகளும் மற்றுமுள்ள யாவையும் அப்படியே. ஆக முன்னடிகளால் எம்பெருமானுடைய ஜகதாகாரத்வம் சொல்லப்பட்டு, மேல் அஸாதாரண விக்ரஹயுக்தனா யிருக்குமிருப்பு சொல்லப்படுகிறது. – கரியமேனியன் செய்யதாமரைக்கண்ணன் விண்ணோரிறை சுரியும் பல்கருங்குஞ்சி எங்கள் சடர் முடியண்ணல் கண்ணன் தோற்றம் – திரியுங்காற்றோடகல்விசும்பு திணிந்தமண் கிடந்த கடல் எரியுந் தீயோடிருசுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் என்று அந்வயக்ரமம். முற்றுமாய் என்றது ‘முற்றுமாம்’ என்றபடி.

ஆறாயிரப்படியை நோக்குமிடத்து, பாசுரமுள்ளபடியே அந்வயக்ரமத்தைப் பிள்ளான் திருவுள்ளம் பற்றினகாகப் புலப்படுகின்றது; அண்ணல் தோற்றமே- “எம்பெருமானை நான் காணப்பெற்றேன்” என்பது ஆறாயிரம்.

 

English Translation

My Lord Krishna of dark hue, lotus eyes, dark locks and radiant crown is the blowing wind, the sky and hard Earth. He is the rolling ocean, the burning fire, the orbs and the gods.  Mortals and the things everywhere are also him, the Lord of gods.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top