(3179)
வைம்மின் நும்மனத் தென்று யானுரைக் கின்ற மாயவன் சீர்மையை
எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது நிற்க நாfடொறும்,
வானவர் தம்மை யாளும் அவனும் நான்முக னும்ச டைமுடி அண்ணலும்,
செம்மை யாலவன் பாத பங்கயம் சிந்தித் தேத்தி திரிவரே.
பதவுரை
|
நும் மனத்து |
– |
உங்கள் நெஞ்சிலே |
|
வைம்மின் என்று |
– |
வையுங்கள் என்று |
|
யான் உரைக்கின்ற |
– |
என்னால் சொல்லப்படுகின்ற |
|
மாயவன் |
– |
மாயோனுடைய |
|
சீர்மையை |
– |
சீல குணத்தை |
|
எம்மனோர்கள் |
– |
என்னைப் போன்றவர்கள் |
|
உரைப்பது என் |
– |
சொல்லுவது என்னோ? |
|
அது நிற்க |
– |
அது கிடக்க: |
|
வானவர் தம்மை ஆளுமவனும் |
– |
தேவர்களை ஆள்பவனான இந்திரனும் |
|
நான்முகனும் |
– |
பிரமனும் |
|
சடை முடி அண்ணலும் |
– |
ஜடாதரக் கடவுளான சிவனும் |
|
செம்மையால் |
– |
முறைமை தவறாது |
|
பரதபங்கயம் |
– |
திருவடித் தாமரைகளை |
|
நாள்தொறும் |
– |
எப்போதும் |
|
சிந்தித்து |
– |
சிந்தனை செய்து |
|
ஏத்தி |
– |
துதித்து |
|
திரிவர் |
– |
இதுவே காரியமாக இருப்பர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மிகவும் அபிமாந யுக்தர்களான பிரமன் சிவன் முதலானரும் தடையின்றியே வந்து பணியலாம்படி யிருக்கிற எம்பெருமானுடைய சீலாதிசயத்தைப் பேசுகிறார். “சிந்தியுங்கோள்!” என்று அடிக்கடி நான் சொல்லிக்கொண்டு வருகிற எம்பெருமானுடைய சீலத்தை நான் சொல்லுவது ஒருபுறமிருக்கட்டும்; தங்களையே கடவுளராக மதித்திருக்கின்ற இந்திரன் பிரமன் உருத்திரன் முதலானாருங்கூடத் தங்களுடைய செவ்வைக் கேட்டை விட்டு ருஜுப்ரக்ருதியுடனே அப்பெருமானுடைய பாதாரவிந்தங்களைப் பணிகின்றார்கள்; அன்னவர்களும் வந்து பணியலாம்படி அவன் தன்னை அமைத்துக்கொடுக்கின்றானென்றால் இது எப்படிப்பட்ட சீலமென்று பாருங்கள்; நானெடுத்துரைக்க வேண்டுவதோ இரு! என்கிறார்.
என்று+யான் என்றியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல் விதி. எம்அனோர்கள்-எம்மனையவர்கள்; எம்மைப்போன்றவர்கள் என்றபடி.
English Translation
When the great Indra himself, Brahma and Siva too, room about contemplating his radiant lotus feet, what can a person of my nature say about the grace of the Lord? So let it be.
