(317)

(317)

நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று

உந்தி பறந்த ஒளியிழை யார்கள்சொல்

செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்

ஐந்தினோ டைந்தும்வல் லார்க்குஅல்ல லில்லையே.

பதவுரை

நந்தன மதலையை

–

நந்தகோபான் குமாரனான கண்ணபிரானையும்
காகுத்தனை

–

இராமபிரானையும்
நவின்று

–

(ஒருவர்க்கொருவர்  எதிரியாய்நின்று) சொல்லி
உந்தி பறந்து

–

உந்தி பறக்கையாகிற லீலாரஸங்கொண்டாடின
ஒளி இழையார்கள்

–

அழகிய ஆபாரணமணிந்த ஆய்ப்பெண்களிருவருடைய
சொல்

–

சொல்லி,
செம்தமிழ்

–

அழகிய தமிழ்பாஷையாலே
தென் புதுமை விட்டு சித்தன் சொல்

–

அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வார் அருளிச்செய்த
ஐந்தினோடு ஐந்தும்

–

க்ருஷ்ணாவதார விஷயமான ஐந்தும், ராமாவதார விஷயமான ஐந்துமாகிய இப்பத்துப் பாசுரங்கனை
வல்லார்க்கு அல்லல் இல்லை

–

துன்பமொன்று மில்லையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதனால், இத்திருமொழி கற்றார்க்குப் பல்சொல்லித் தலைக்கட்டியவாறு.

அடிவரவு:-   என்னாதன் என்வில் உருப்பிணி மாற்று பஞ்சவர் முடி காளியன் தார்மாய காரார் நந்தன் நெறிந்த.

English Translation

This decad of pure Tamil songs by Vishnuchitta of Srivilliputtur recalls the Undi  Parattal, sing-and swing-the-hips dance of beautiful girls extolling Krishna and Rama alternately. Those who master it shall be free from grief.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top