(3160)
வானவராதியென்கோ வானவர்தெய்வமென்கோ
வானவர்போகமென்கோ வானவர்முற்றுமென்கோ
ஊனமில்செல்வமென்கோ ஊனமில்சுவர்க்கமென்கோ
ஊனமில்மோக்கமென்கோ ஒளிமணிவண்ணனையே.
பதவுரை
|
ஒளி மணி வண்ணனை |
– |
பிரகாசமுள்ள மாணிக்கம் போன்ற வடிவையுடைய பெருமானை |
|
வானவர் ஆதி என்கோ |
– |
நித்யஸூரிகட்குத் தலைவன் என்பேனோ? |
|
வானவர் தெய்வமென்கோ? |
– |
அந்த நித்தியஸூரிகளால் கதியென்று பற்றப்படும் தெய்வமென்பேனோ? |
|
வானவர் போகம் என்கோ |
– |
அந்த நித்யஸ்ரிகளால் அனுபவிக்கப்படுகின்ற பொருள் என்பேனோ? |
|
வானவர் |
– |
அந்த வானவர்கட்கு |
|
முற்றும் என்கோ |
– |
(இதுவரையிற் கூறப் படாத) எல்லாமும் என்பேனோ? |
|
ஊனம் இல் |
– |
என்றும் அழிதல் இல்லாத |
|
செல்வம் என்கோ |
– |
செல்வமென்பேனோ? |
|
ஊனம் இல் ஸ்வர்க்கம் என்கோ? |
– |
ஒருநாளும் நசிக்காத ஸுவர்க்க போகமென்போனோ? |
|
ஊனம் இல் மோக்கம் என்கோ? |
– |
விலஷணமான மோக்ஷம் என்பேனோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ;எம்பெருமான் ஐச்வரியம் முதலிய புருஷார்த்தங்களையுடையவனென்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார். “வானவர் தெய்வம், வானவர் போகம், வானவர் முற்றும்” என்று வருவதனால் ‘வானவராதி’ என்பதற்கு- கீழ்ச்செய்யுளிற்போல ப்ரஹ்மாதி தேவர்கட்குத் தலைவன் என்று பொருள்கொள்ளாது நித்யஸூரிகட்குத் தலைவன் என்று பொருள் உரைக்கப்பட்டது. எம்பெருமான் ப்ரஹ்மாதி தேவர்களைப் படைத்தல் முதலியன செய்வதன்றி “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” என்றபடி உல்லாமுமாக இருப்பது நித்யஸூரிகட்கேயென்க. வானவர் போக மென்கோ என்பதற்கு அவ்வானவர்கட்கு ஆராதனையினாலுண்டாகிய பயனான பேரின்பம் என்பேனோ? என்றும், வானவர் முற்றுமென்கோ என்பதற்கு- அவ்வானவர்கட்கு ஸகலவகையான ரக்ஷணமும் என்பேனோ? என்றும் உரைக்கலாம்.
(வானவராதி.) எம்பெருமான் ஐச்வர்யம் முதலிய புருஷார்த்தங்களையுடையவ னென்பதை இப்பாட்டிலருளிச்செய்கிறார். “வானவர் தெய்வம், வானவர் போகம், வானவர் முற்றும்” என்று வருவதனால் “வானவராதி” என்பதற்குகீழ்ச்செய்யுளிற்போல ப்ரஹ்மாதி தேவர்கட்குக் தலைவன் என்று பொருள் கொள்ளாது நித்யஸுரிகட்குத் தலைவன் என்று பொருள் உரைக்கப்பட்டது. எம்பெருமான் ப்ரஹ்மாதி தேவர்களைப் படைத்தல் முதலியன செய்வதன்றி ”உண்ணுஞ்சோறு பருகுநீர் இன்னும் வெற்றிலையுமெல்லாங் கண்ணன்” என்றபடி எல்லாமுமாக இருப்பது நித்யஸுரிகட்கே யென்க. ‘வானவர் போகமென்கோ’ என்பதற்கு அவ்வானவர்கட்கு ஆராதனையினாலுண்டாகிய பயனான பேரின்பம் என்பேனோ என்றும், வானவர் முற்றுமென்கோ என்பதற்கு – அவ்வானவர்கட்கு ஸகலவகையான ரக்ஷணமும் என்பேனோ? என்றும் உரைக்கலாம். ஊனமில் செல்வம் – சிலநாள் நின்று வற்றுவதல்லாமல் எந்நாளும் அழியாக ஸம்பத்து, ஊனமில் சுவர்க்கம் – சிலநாளிருந்து புண்ணியப்பயனொழிந்தபிறகு தள்ளும்படியானதல்லாமல் கல்பகாலம் வரையில் அழிவின்றி வாழும் சுவர்க்கம். ஆத்மாவை யநுபவித்தல் மாத்திரத்தையுடைய கைவல்யமென்னும் மோக்ஷத்தினும் வேறுபாடு விளங்க, பரமாத்மாவான எம்பெருமானை யநுபவித்தலையுடைய பரமபுருஷார்க்கமாகிற மோக்ஷத்தை ‘ஊனமில் மோக்கம்’ என்றார்.
English Translation
Shall I call him my gem-hued radiant Lord?, the Lord of celestials or their ecstaic enjoyments?, or their ends?. or endless wealth?, or the eternal heavens?, or timeless liberation?
