(3101)

(3101)

செய்யேல் தீவினையென் றருள் செய்யும்,என்

கையார்ச்சக்கரக் கண்ணபிரானே,

ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்

எய்யாதேத்த, அருள்செய்யெனக்கே.

 

பதவுரை

தீ வினை செய்யேல் என்று

கெட்ட காரியங்களைச் செய்யாதே என்று

அருள் செய்யும்

(என் திறத்தில்) கிருபை செய்தருளின

கை ஆர்சக்கரம்

திருக்கையில் பொருத்தின திருவாழியை உடைய என் கண்ணபிரானே!

ஐயார்கண்டம் அடைக்கிலும்

கோழை வந்து கழுத்தையடைக்கும்படியான துர்த்தசை நேர்ந்தாலும்

நின் கழல்

தேவரீருடைய திருவடியை

எய்யாது

துதிக்கும்படியாக

எனக்கு அருள்செய்

என்னளவில் கிருயை பண்ணவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உத்க்ரமான தசையான துர்க்கதிலும், நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணியருள வேணுமென்கிறார்.- கையும் திருவாழியுமாயிருக்கிற இருப்பைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்ட பெருமானே! நான் உம்மிடத்து துக்க நிவ்ருத்தியை விரும்புகின்றேனல்லேன்; நெஞ்சிலே கோழைகட்டிப் போய்த் தடுமாறும்படியான நிலைமை நேர்ந்தாலும் நேருக; அப்போதும் உன் திருவடிகளில் பக்தி குலையாமே துதிக்கும்படி செய்தருளினாற்போதும் என்றாராயிற்று. இங்கு “துர்க்கதாவபி ஜாதயாம் த்வத்கதோ மே மநோரத;, யதீ நாசம் ந விந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா.” என்ற ஜிதந்தாச்லோகம் அநுஸந்திக்கவுரியது. எம்பெருமானே! எனக்கு எப்படிப்பட்ட துர்க்கதி நேர்ந்தகாலத்தும், சிந்தனைமாத்திரம் உன்னைவிட்டு அகலாதிருக்குமாயின், அவ்வளவே நான் உய்யப் போதுமானது – என்பது மேற்குறித்த ச்லோகத்தின் கருத்து.

ஐயார்-ஐ என்று கோழைக்குப் பெயர் ஆர்விகுதி இழிவுப்பொருளது; ‘கோழைப் பையலார்’ என்பது நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி.

 

English Translation

O Krishna, Lord wielding the discus, guarding me against evil deeds!  Grant that I may praise your feet forever, even when phlegm chokes my lungs.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top