(3033)

(3033)

அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,

அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,

அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,

அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே.

 

பதவுரை

அறியாமை

(தனது உண்மையை பிறர்) அறியாதபடி

குறள் ஆய்

வாமன மூர்த்தியாகி

மாவலி

‘மகாபலியே!

மூ அடி நிலம் என்று

மூன்றடி நிலம் (வேணும்) என்று சொல்லி

அறியாமை

(கபட குணத்தை பிறர்) என்று சொல்லி

வஞ்சித்தாய்

வஞ்சித்து நிலத்தைக் கவர்ந்தவனே!

எனது ஆவி உள் கலந்து

எனது நெஞ்சினுள்ளே சேர்ந்து

அறியா மா மாயத்து அடியேனை

அறியாமையை விளைவிப்பதான ஸம்ஸாரத்திலாழ்ந்து கிடந்த என்னை

அறியா காலத்துள்ளே

தொண்டுபடுதற்கு அறியா அந்தக்காலத்திலே

அடிமைக் கண்

தொண்டு செய்யும் தொழிலிலே

அன்பு

ஆவலை

செய்வித்து வைத்தாய்

உண்டாக்கி வைத்தாய்

ஆல்

ஆச்சரீரயம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்விஷயத்தில் எம்பெருமான் செய்தருளின நன்மைகளைப் பேசுகிறாரிதில்.  இப்பாட்டின் முன்னடிகளை அந்வயிப்பதில் அபிப்ராயபேதமுண்டு பாட்டு உள்ளபடியே அந்வயித்து (அதாவது) அறிவுநடையாடாத காலத்திலேயே எனக்குக் கைங்கர்ய ருசியைப் பிறப்பித்து (அதை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு போவதற்கு வழியில்லாதபடி) அறிவைத் தொலைப்பதான மாமாயத்திலே (ஸம்ஸாரத்திலே) பின்னையும் வைத்துக் கெடுத்தாய் என்று இழவுதோற்றச் சொல்லுகிறதாகத் திருமாலையாண்டான் உடையவர்க்கு அருளிச்செய்தார்.  இதை உடையவர் கேட்டு கீழ்ப்பாசுரங்களும் மேற்பாசுரங்களும் உகவை தலையெடுத்துச் செல்லாநிற்க இடையே இப்பாட்டு அப்ரிதிதோற்றச் சொல்லுமது சேராது;  ஆகவே வேறுவகையாக அந்வயித்துப்

பொருள்கொள்வது பாங்கு;  ‘அறியாமாமாயத்து’ என்பதை ‘வைத்தாய்’ என்பதோடு கூட்டாமல் ‘அடியேனை’ என்பதோடு கூட்டுக.  அறியாமா மாயத்தடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்துவைத்தாய் = அறிவு கேட்டை விளைக்

குமதான ப்ரக்ருதியிலே மங்கிக்கிடந்தவென்னை அறிவுநடையாடாத இளமையிலேயே அடிமையில் அன்புடையேணாம்படி செய்துவைத்தாய் என்று அர்த்தம்.  ஆகவே இதுவும் ப்ரிதிதோற்ற உபகாரத்தையே சொன்னபடி என்று நிர்வஹித்தருளினார்.

முன்னடிகளிற் கூறிய விஷயத்திற்குப் பின்னடிகளிற் கூறும் விஷயம் த்ருஷ்டாந் தம்  மஹாபலியை மயக்கி வசீகாரித்ததுபோலவே என்னையும், எனக்குத் தெரியாபடி என்னுள்ளே கலந்து வசப்படுத்திக்கொண்டாய் என்கை.

நிலம் மாவலி மூவடியென்று = இதை அநந்வித பாஷணமாக வியாக்கியானங்களில் திருவுள்ளம் பற்றுகிறார்கள். அது மிகவும் ரஸமானது.  எம்பெருமான் ஒருநாளும் யாசகத்தொழில் செய்தறியாதவனாதலால் உதாரவனிடத்திலே சென்று இன்னவிதமர்கப் பேசவேணும் என்பதறியாமல்,’மாவலியே மூவடி நிலம் தா’ என்றுஅந்வயத்தோடே கூடின

தாகச் சொல்லவறியாமல், நிலம் மாவலி மூவடி என்று அப்படியே சொன்னானென்க.

 

English Translation

My years of innocence were steeped in the Maya of delusion, You crept into my heart and planted the love for devotion.  Like an innocent child you came and asked. “Three steps of Earth, O Great Bali”, and deceived him!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top