(3020)
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட,
நங்கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே.
பதவுரை
|
திண் |
– |
திண்மையையுடைய |
|
நன் |
– |
நல்ல |
|
வீடு முதல் |
– |
மோக்ஷம் முதலாக |
|
முழுதும் ஆய் |
– |
எல்லாவற்றையும் அளிப்பவனாய் |
|
ஏண்ணின் மீதியன் |
– |
நினைவுக்கு அப்பாற்பட்டவனாய் |
|
எம்பெருமான் |
– |
எமக்கு ஸ்வாமியாய் |
|
மண்ணும் விண்ணும் எல்லாம் |
– |
பூமியும் ஆகாசமுமாகிய முழுவதையும் |
|
உடன் உண்ட |
– |
ஒருங்கே அமுது செய்தவனான |
|
நம் கண்ணன் |
– |
நமது கண்ணபிரானே |
|
கண் |
– |
(உலகுக்கு) இறைவன் |
|
அல்லது |
– |
அல்லாமல் |
|
ஓர்கண் |
– |
வேறொரு தலைவன் |
|
இல்லை |
– |
இல்லை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரானே உலகுக்கெல்லாம் நிர்வாஹகனென்கிறார். மோக்ஷம் முதலிய ஸகல புருஷார்த்தங்களையும் அளித்தருள்பவனாய், எண்ணிறந்த திருக்குணங்களையுடையனாய் அக்குணங்களைக்காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவனாய், பிரளயாபத்து வந்தபோது பூமி முதலான ஸகல லோகங்களையும் ஒருசேரத்திருவயிற்றிலே வைத்து நோக்குபவனான நமது கண்ணபிரானே உலகுக் கெல்லாம் கண்ணாயிருப்பவன்.
திண்ணன் என்றவிடத்து மகரனசரப்போலியாய், திண்ணம் என்றபடியாகக் கொண்டால், இப்போது சொல்லுகிற விஷயம் அசைக்க முடியாதது என்றவாரும். ‘தின் நல் வீடு’ என்று கொண்டு திடமாயும் விலக்ஷணமாயு மிருக்கிற, மோக்ஷமென்றதாகவுங் கொள்ளலாம். ஒருநாளுமழியாத பரமப்தம் முதலிய ஸகல லோகங்களையும் தன் விபூதியாகவுடையவன் என்றும் பொருளாகலாம்.
எண்ணின்; மீதியன் என்றால் எண்ணுக்கு மீறியுள்ளவன் என்றபடி குணங்களாலோ விபூதிகளாலோ எண்ணை மீறினவனென்றபடியாய் வாங்மநஸாபாரிச்சேத்ய ஸ்வரூபரூபகுண விபூதிகளுடைமை சொல்லிற்றாகுமென்க.
“மண்ணும் விண்ணுமெல்லாமுடன் காத்த”; எண்ணாதே உண்ட என்றது, அவற்றின் ரெக்ஷணமானது தனக்கு உணவுபோலே பரம போக்யமென்பதைக் காட்டுதற்காம். பிரளய காலத்தில் எம்பெருமான் * மண்ணாடும் விண்ணாடும் வானவரும் காணவரும் மற்றுமெல்லா முண்ணாத பெருவெள்ள முண்ணாமல் தான் விழுங்கி உய்யக்கொள்ளுகிறானென்பது நுர்ற்கொள்கை. எல்லாரையும் திருவயிற்றிலே வைத்துக் காத்தருளினவன் நிர்வாஹகனாயிருக்கத் தகுதியுண்டே யன்றி, அவனது திருவயிற்றினுள்ளே கிடந்து ரக்ஷணம் பெற்று வெளிவந்த சிறு தெய்வங்களுக்கு நிர்வாஹகத்வம் அஸம்பாவிதம் என்று இப்பாசுரத் தினால் காட்டப்பட்டதாயிற்று.
English Translation
My Lord, -bestower of heaven and all else, -swallowed the Earth and sky. He is beyond comprehension. He is my Krishna, dear as my eyes, Other than him, there is no doer. This is certain.
