(296)

(296)

ஞால முற்றும்உண்டு ஆலி லைத்துயில் நாரா யணனுக்குஇவள்

மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை

கோல மார்பொழில் சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன

மாலை பத்தும் வல்ல வர்கட்கு இல்லை வருதுயரே.

பதவுரை

இவள்

“இப்பெண்பிள்ளையானவள்,
ஞாலம் முற்றும் உண்டு

எல்லாவுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி
ஆல் இலை துயில்

ஒரு ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின
நாராயணனுக்கு

எம்பெருமான் விஷயத்தில்
மால் அது ஆகி

மோஹத்தையுடையளாய்

(அவனை அணைக்கவேண்டு மென்ற மநோரதத்தினால்)

மகிழ்ந்தனள் என்று

மனமுகந்தாள்” என்று
தாய் உரை செய்ததனை

தாய் சொல்லியதை
கோலம் ஆர்

அழகு நிறைந்த
பொழில் சூழ்

சோலைகளாலே சூழப்பட்ட
புதுவையர் கோன்

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான
விட்டுச் சித்தன்

பெரியாழ்வார்
சொன்ன

அருளிச்செய்த
மாலை

சொல் மாலையாகிய
பத்தும்

இப்பத்துப்பாட்டையும்
வல்லவர்கட்கு

ஓதவல்லவர்களுக்கு
வரு துயர் இல்லை

வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ் சொல்லித் தலைக்கட்டியவாறு. ஆழ்வார் தாமே தாயின் அவஸ்தையை அடைந்து அம்முகமாக, தனக்குப் பகவத்விஷயத்திலுள்ள அபிநிவேஷத்தை வெளியிட்டருலினரென்க.

அடிவுரவு ஐய வாயில் பொங்கு ஏழை நாடு பட்டம் பேச காறைகைத்தலம் பெரு ஞாலம் நல்ல.

English Translation

This decad of sweet songs by Vishnuchitta, King of Srivilliputtur surrounded by beautiful groves, recalls a mother’s lament on her daughter’s infatuation with the Lord Narayana who swallowed the Universe and slept as a child on a fig leaf. No grief can come on those who master it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top