(295)

(295)

பெருப்பெ ருத்தகண் ணாலங்கள்செய்து பேணிநம் மில்லத் துள்ளே

இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும்ஒன் றெண்ணு கின்றாள்

மருத்து வப்பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன்முன்

ஒருப்ப டுத்திடு மின்இவளை உலகளந் தானி டைக்கே.

பதவுரை

(இவளுக்கு)

பெருபெருத்த

மிகவும் விசேஷமான
கண்ணாலங்கள் செய்து

கல்யாண காரியங்களைச்செய்து
பேணி

அன்பு பூண்டு
நம் இல்லத்துள்ளே

நம் வீட்டுக்குள்ளேயே
இருந்துவான் எண்ணி நாம் இருக்க

(இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க
இவளும்

இவளொ வென்றாள்
ஒன்று எண்ணுகிறாள்

(நம் எண்ணத்திற்கு விபரீதமாக) மற்றொன்றை எண்ணுகிறாள்.

(என்று தாயாகி நான் சொல்ல இதைக்கேட்ட பந்துக்கள்)

மருத்துவப்பதம் நீங்கினாலென்னும் வார்த்தைபடுவதன் முன் –வயித்தியன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்து செய்யாவிடில் அது கை தவறுவது போல இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழிந்தாளேன்கிற அபவாதம் பிறப்பதற்கு முன்.

இவளை

இவளை
உலகு அளந்தானிடைக்கே

உலகளந்தருளின கண்ணபிரானிடத்திலேயே(கொண்டு போய்)
ஒருபடுத்திடுமின் –

சேர்த்துவிடுங்கள்

(என்று கூறியதைத் தாய் கூறுகின்றாள்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பெண்பிள்ளைக்கு அவ்வக்காலங்களில் செய்யவேண்டிய மங்கள காரியங்களை விசேஷ விபவமாகச்செய்து மிக்க அன்பு பாராட்டி நம் அகத்திலேயே இவளை வளர்ப்பதாக நினைத்திருக்கும் நமது நினைவுக்கு நேர்மாறுபாடாக இவள் வெளிப்புறப்பட்டு ஓடுவதாக நினைத்திருக்கின்றாளே! என்று கலங்கிக் கூறின தாயை நோக்கி; பந்துக்கள், அங்ஙனாகில் இவளை இப்போதே கண்ணபிரானிடத்திற் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுதலே தகுதியாம்; அல்லாவிடில் வைத்யன் தான் செய்கிற ஒளஷதத்தில் பாகம்பார்த்துச் செய்யாதபோது, அம்மருந்து கைதவறிப் போவது போல, இவள்பதம்பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழியப் போனாள் என்று பெருத்ததொரு லோகாபவாதம் பரவி விடுமென்று-கர்த்தவ்ய

நிரூபணம்பண்ணிக் கூறியபடியைத் தாய் கூறினளென்க.

English Translation

“With big lavish celebrations we thoughts we could keep her safely inside our home, but she has been having other thoughts. Before she brings more blame by exceeding the physician’s measure, unite her to the Lord who measured the Earth”

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top