(2626)
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு
ஆவான் பூகாவால் அவை.
பதவுரை
|
(ஸ்ரீமந் நாராயணனே) |
||
|
பார் உண்டான் |
– |
(பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்; |
|
பார் இடந்தான் |
– |
(மஹாவரடாநஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்; |
|
பார் அளந்தான் |
– |
(திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்; |
|
முன் |
– |
முதல்முதலாக |
|
பார் இடம் படைத்தான் |
– |
இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான் |
|
என்பர் |
– |
என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்; |
|
பார் உமிழ்ந்தான் |
– |
(பிறகு) அதைப் புறப்படவிட்டான்; |
|
பார் இடம் ஆவானும் தான் |
– |
அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வரீபியாகவுமிருக்கிறான்; |
|
ஆனால் |
– |
ஆனபின்பு (நமக்கு) |
|
இடம் ஆர் |
– |
ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை) |
|
அவை |
– |
இவ்வுலகங்கள் |
|
மற்று ஒருவர்க்கு |
– |
ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு |
|
ஆவான் புகா |
– |
சேஷப்பட்டிருக்க மாட்டா. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பாருண்டான்.) கீழ்ப்பாட்டில் இப்பார் என்ற இவ்வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில் ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. ஸ்ரீமந்நராயணனையே ஸர்ஸ்வாமியென்ற கொண்டு பற்றாமல் கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸதாமஸப் பிராணிகள் விஞ்சியிருக்கக் கண்டார். திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர வேறொன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார்.
பிரளயங் கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் நாராயணன்; அவற்றை மறுபடியும் வெளிப்படுத்தினவனும் அவனே; பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு போன ஹிரண்யாக்ஷனை மஹாவராஹமாகிக்கொன்று அப்பூமியை மீட்டுக் கொணர்ந்தவனும் அவனே; மற்றொருகால் மஹாபலியின் அஹங்காரத்தை அடக்கி அவன் பக்கலில் நின்றும் இவ்வுலகை ஸ்வாதீநப்படுத்திக் கொண்டவனும் அவனே; இங்ஙனே பல் பல சொல்வதேன்? இப்புவனி முழுவதையும் உண்டாக்கினவன் அவனே; இவ்விஷயம் நான் உத்ப்ரேக்ஷித்துச் சொல்லுகிறதல்ல; வேதங்களும் வைதிகர்களும் சொல்லுவது இதுவே. ஆசுவிப்படி எம்பெருமான் இவ்வுலகத்திற்கு ஸர்வப்ரகாரங்களாலும் ரசக்ஷனாயிருப்பதுபற்றி சாஸ்திரங்களில் “எம்பெருமானே இவ்வுலகம், இவ்வுலகமே எம்பெருமான்” என்ற ஒற்றமைநயந் தோன்றச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகையாலே இவ்வுலரகங்கட்கு அப்பெருமாளைத் தவிர்த்து வேறொருவரும் ஆச்ரயமாயிருக்க முடியாது; இவ்வுலகமும் அவனுக்கன்றி மற்றொருவர்க்கு சேஷப்பட்டிருக்க வழியில்லை என்றாயிற்று.
பாரிடமாவானம் தான் = உபநிஷத்திலவ் *************** ஸர்வம் வல்விதம் பரஹ்ம்” என்று சொல்லிருப்பது இங்கே நினைக்கத்தக்கது. எல்லாம் பரப்ரஹ்மே யென்றது- எல்லாப் பொருள்களும்ப்ரஹமத்தையே ஆதாரமாகவும் ரக்ஷகமாகவும் சேஷியாகவும் தாரகமாகவுங் கொண்டவை என்றபடி.
ஆனால் ஆர் இடமே = எல்லாவுலகமும் ஸ்ரீமந்நாராயணனிட்ட வழக்காயிருக்கும்போது வேறொருவர் புகலிடமாயிருக்கக்கூடுமோ? என்கை. ஆனால் என்றது ஆனதால் என்றபடி. இரண்டாமடியிலும் நான்மகாமடியிலும், ஆல்- அசைச்சொல். அவை மற்றொருவர்க்கு அவனுக்கு ஆனான்” என்றால் ‘இவன் அவனுக்கு அடிமைப்பட்டான்’ எனப்பொருள்படுதல் காண்க. புகா -பலவின் பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று. பாருண்கை, பாருமிழ்கை முதலிய கீழ்ச்சொன்ன செயல்களெல்லாம் எம்பெருமானிடத்தில் தவிர மற்ற தெய்வங்களிடத்துப் பொருந்தமாட்டா என்னவுமாம்.
English Translation
They say, the lord who swallowed the Earth and remade it, lifted it and measured it, is also the lord who made the earth and space in the beginning, if the lord is himself the Earth and space as well, who else can be our refuge? It is impossible to seek another.
