(2570)

(2570)

காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர்

மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும்

காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து

மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே.

 

பதவுரை

காலை

உதய காலத்தில்

வெய்யோற்கு முன்

ஸூர்யனாகிய சக்கரவர்த்திக்கு எதிரில்

ஒட்டுக் கொடுத்த

நிற்கமாட்டாமல் புறங்கொடுத்தோடுதலைச் செய்த

கங்குல குறும்பர்

இருளாகிய சிற்றரசர்கள்

மாலை

ஸாயங்காலத்திலே

வெய்யோன்

அந்த ஸூர்யனாகிய பேரரசன்

பட

அழிய

வையகம் பாவுவர்

(தாங்கள்) உலக முழுவம் பரவுவார்கள்;

அன்ன கண்டும்

அப்படிப்பட்ட தன்மையைப் பார்த்திருந்தும்.

காலை

காலத்திற்கு ஏற்றபடி

நல் ஞானம் துறை படிந்து ஆடி

நல்ல ஞானமாகிய துறையிலே இறங்கி மூழ்கி (பகவத் பக்தியாகிய வெள்ளத்தில் அழ்ந்து ஈடுபட்டு)

கண்போது செய்து

பக்தி பாரவசயத்தாலே கண்களை  மூடிக்கொண்டு

மாலை

எம்பெருமானை

நல் நாவில் கொள்ளார்

(தங்களுடைய) நல்ல நாவினால் பெயர்கூறித் துதியார்;

அவன் மைபடி

அவனது கரிய திருமேனியை

நினையார்

நினைப்பதற்கு செய்யார்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தில் அனேகர்  “வைகலும் வகைல் வரக்கண்டு மஃதுணரார்” (நாலடியார்- அறன்வலியுறுத்தல் 9) என்றபடி காலைப்பொழுதும் மாலைப்பொழுதும் மாறிமாறி வந்துகொண்டு காலங்கழிந்துகொண்டே செல்லுகிறபடியை ப்ரத்யக்ஷமாகவே பார்த்துக்கொண்டிருக்கச் செய்தேயும் தங்களுடைய இளமைப் பிராயம் விரைவாகக் கழிந்து போவதில் கருத்தூன்றுதலின்றி எம்பெருமான் பக்கல் ஈடுபாடு கொள்ளாமல் வீணேயிழந்து பழுதே பலபகலும் போக்குகிறார்களேயென்று ஆழ்வார் வெறுத்து அருளிச் செய்கிறார். உலகர்கள் தினப்படி ஸூர்யன் உதிக்கும்போது வேண்டியபடி பொருள்களைத் திரட்டலராமென்று களிக்கிறார்கள்; பிள்ளை ஸூர்யன் அஸ்தமிக்கும்போது வேண்டிபடி விஷய போகங்களைச் செய்யலாமென்று குதூஹலிக்கிறார்கள்; இப்படி ஸூர்யனுடைய உயத்தேடு அஸ்தமனத்தோடு வரசிய ஸம்ஸாரிகள் களிப்பதே கருமமாயிருக்கிறார்களே யன்றி, ‘இங்ஙனம் வாள்களாகி நாள்கள் செல்லுகினற்னவே, பழுதே பலபலகும் போகின்றனவே! ஊமனார் கண்ட கனவிலும் பழுதா யொழிகின்றனவே நாள்கள்’ என்று கவலைப்படுவாருமில்லையே! ஒரு கணப்பொழுதையும் பகவதநுஸந்தாகத்திற் செலுத்துவாரில்லையே! என்று ஸம்ஸாரிகளுக்காக ஆழ்வார் தாம் கவலைப்படுகிறார்.

இவ்வாழ்வார் உலகத்தாரைச் சீர்திருத்தி உஜ்ஜிவிக்கச் செய்யும் பொருட்டுத் திருவவதரித்தவராதலாலும் மிக்க ஜீவகாருண்ய முடையவராதலாலும் பிறரிழவுக்குப் பரிவு கொள்ளக்கடவராவர். முதலிரண்டடிகளால் பகலும் இரவுமாக மாறி மாறி வந்து ஆயுள்நாளைக் கழியச் செய்தலை எடுத்துக்காட்டியபடி, இது செல்வ நிலையாமைக்கும் ஒரு திருஷ்டாந்தமாம்.

பின்னடிகளிரண்டும் நாட்டாரைப் பழிப்பன; காலை- ஸத்வகுண ப்ரதாநமான விடியற்காலத்தில் நல்ஞானத் துறைபடிந்து- சிறந்த ஆத்மஜ்ஞாநத்துக்கு இறங்கு துறையாகிய ஆசார்யனை வணங்கி, ஆடி- அவ்வாசார்யோபவதேசத்திலே ஆழ்ந்து கண்போதுசெய்து- விஷயாந்தரங்களில் அறிவு செல்லாதபடி அதனை உள்ளடக்கி, மாலை நல்நாவில் கொள்ளார்- தங்கள் பக்கதல் அன்புடைய ஸர்வேச்வரனை நல்ல நாவினால் துதியார்; அவன் மைப்படி நினையார்- அவனுடைய கரிய திருமேனியை தியானிப்பதுஞ் செய்யார் என்று லௌகிகரைப்பழித்தபடி. கல்ஞானம்- எம்பெருமானை இலக்காகக்கொண்ட ஞானமே நல்ல ஞானம்; மற்றை விஷயமான ஞானமெல்லாம் அஜ்ஞானமும் விபரீதஜ்ஞானமுமா மென்க. “ஒன்தாமரையான் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு” (முதல் திருவந்தாதி) என்ற பொய்கையார் பாசுரமறிக.

ஸ்நாநத்துக்கு உரிய காலம் வைகறையாதலால் ‘துறைபடிந்தாடி’ என்பதற்கு ஏற்ப ‘காலை’ எனப்பட்டது. “கண்போதுசெய்து” என்பதற்கு- இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் ‘எம்பெருமான் பக்கலிலே ஞானெமன்னும் உட்கண் மலர்ந்து’ என்ற பொருளும் கொள்ளத்தகும். இங்கே நம்பின்னை யீடு காண்க:- “போதுசெய்து என்று மொட்டிக்கைக்கும பேர், அலருகைக்கும் பேர்; புறம்புற்ற விஷயங்களின் கண்செம்பிளித்து என்னுதல்; பகவத் விஷயத்திலே விழித்து என்னுதல்.” என்று.  “பெயரினையே புந்தியாற் சிந்தியாது ஓதியுறு வெண்ணு மந்தியாலாம் பயனங்கென்” (முதல் திருவந்தாதி)  என்றபடி மனப்பூர்வமாக தியானித்தலின்றிச் சொல்மாத்திரத்தால் ஓதி யுருவிடுதல் சிறப்பன்றாதலால் “மாலை நன்னாவிற் கொள்ளார்” என்ற மாத்திரத்தோடு நில்லாமல் “நினையாரவன் மைப்படியே” என்றும் அருளிச் செய்தது.

போது- மலரும் பரவத்து அரும்பு; போரும்பு. நல்நா- எம்பெருமானைத் துதிப்பதற்கென்ற அமைந்த நா:  “நாராயணா வென்னாநா என்னநாவே” (சிலப்பதிகாரம்- ஆய்ச்சியர் குரவை) என்றார் பிறரும்.

இப்பாட்டுக்குக் கிளவித்துறை கூறவேணுமென்னும் நிர்ப்பந்தமில்லை; அங்ஙனே கிரபபந்தங் கொள்ளில், இருள்கண்டு அஞ்சுகிற தலைவி, தோழியையும் தாயும் வெறுத்தல் இது என்று கொள்ளலாம். நாயகி எம்பெருமானாகிய நாயகனைப் பிரிந்து அப்பிரிவை ஆற்றாது நிற்கிற நிலையில் ஸூர்யன் அஸ்தமித்துக் காமோத்தீபமான இராப்பொழுது வந்து எங்கும் இருள் பரவி அவ்விருள் எம்பெருமானது கரிய திருமேனியை ஞாபகப்படுத்தி வருத்த, அதற்கு ஆற்றாத அந்த நாயகி  “உலகேழு முண்டான சொன்மொழிமாலை அந்தண்ணந்துழய் கொண்டு சூடுமின்” (திருவிருத்தம் 20) என்று சொல்லும்படி தன் நோய்க்குப் பகவந்நாமோச்சாரணமாகிய மந்த்ர பரிஹாரத்தையே உடையவளாதலால், நோய்நிலையும் அதன் பரிஹாரத்தையும் ஆராய்ந்து நடத்தாத தோழியர் செவிலியர் என்பவரைக் குறித்து வெறுத்துக் கூறியது இது என்று கொள்க. முந்தின வாக்கியத்தால், இருளின் கொடுமையை வெளியிட்டாள்; பிந்தினவாக்கியத்தால், அவ்விருள் அவனது திருமேனிக்கு ஸ்மாரகமாய்த் தன்னை வருத்துகிறபடியைத் தேதி முதலியோர் சிந்தியாமையையும், சிந்தித்து அந்நோய் தணிக்கும் உபாயத்தைச் செய்யாமையையும் பழித்தவாறு.

வெய்யோன் – உஷ்ணகிரணமுடையவன்; பகைவர்க்குக் கொடிய பராக்ரமசாலி. குறும்பர் – குறுநில மன்னர். அன்னகண்டும் = அழியாது பாதுகாக்கிற நீதிமானான செங்கோலரசன் அழிந்ததையும், சமயம் நோக்கி எளியாரை வருத்தும் அநீதியையுடைய கொடுங்கோலரசர் பரவினதையும் ப்ரத்யக்ஷமாகப் பார்த்திருந்தும் என்றபடி.

ஓட்டு- ஓடுதல்; முதனிலைதிரிந்த தொழிற் பெயர்.

 

English Translation

The wicked ones of darkness that flee in the morning before the Sun rises return in the evening when the sun sets, and crows the Earth everyday.  Even seeing this, no one turns his thoughts to the dark-hued lord, no one bathes in the wisdom-tank every morning, no one wakes up inwardly and offers praise to the lord Tirumal Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top