(2565)
திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங் கேவரும் தீவினையே?
பதவுரை
|
மேரு |
– |
மஹாமேருமலையானது |
|
திருமால் உரு ஒக்கும் |
– |
திருமகன் கேள்வனான தலைவனது திருமேனியை யொத்திருக்கும் |
|
அ மேருவில் செம் சடரோன் |
– |
அந்த மஹாமேருவின் அருகிலே விளங்குகிற சிவந்த ஒளியையுடைய ஸூர்யன். |
|
திருமால் திரு கை திரு சக்கரம் ஒக்கும் |
– |
அத்தலைவனது அழகிய கையிலுள்ள திருவாழியை யொத்திருப்பன்; |
|
அன்ன கண்டும் |
– |
(அவனுருவத்தையும் சக்கரத்தையும் நேரில் காணாமல்) அவற்றிற்றுப் போலியாயுள்ளவற்றையே கண்டும். |
|
திருமால் உருவோடு அவன் சின்னமே |
– |
அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையும் (நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பரவமடைந்து.) பேரிட்டுக் கூவும்படியான. |
|
ஓர் திருமால் |
– |
ஒப்பற்ற செல்வமாக வேட்கை |
|
தலைக் கொண்ட நங்கட்கு |
– |
ஏற்றுக் கொண்டுள்ள எமக்கு |
|
தீ வினை |
– |
(பிரிவுக்குக் காரணமான) பாவம் |
|
எங்கே வரும் |
– |
எப்படி வரக்கடவது? (வரமாட்டாது.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- போலிகண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்கி யுரைக்கும் பாசுரம். எம் பெருமானை நேராக ஸேவிக்கப் பெறுமளவில் மாத்திரமேயல்லாமல் அவனது போலியைக் காணுமளவில் அவனாகவே பாவித்து இடைவிடாது நாமோச்சாரணம் பண்ணி வருகிற நல்லோமான நமக்கு இங்ஙனே விஹவேதனைக்குரிய தீவினை எங்கிருந்து வந்ததென்று தலைவி வெறுத்துரைக்கிறாள்.
திருமாலுரு வொக்கும் வேமரு = ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பொன்னிறமான திருமேனியினொளி கலப்பதனால் தானும்,பொன்னிறம் பொலியப்பெற்ற எம்பெருமானது பெரிய திருமேனி பொன்மயமான பெரிய மேருபர்வதம் போன்றிருக்குமென்க.
அம்மேருருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக்கரமொக்கும் = அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்காநின்ற சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான். (அன்ன கண்டும் இத்யாதி.) அப்பெருமானுடைய திவ்யரூபத்தையும்,திவ்யாயுதத்தையும் நேரில் காணப் பெறாமல் அவற்றிற்குப் போலியாகவுள்ளவறறையே கண்டிக்கச் செய்தேயும் அவனுருவத்தையும் அவனது அடையாளத்தையுமே நேரிற் கண்டாற்போல அன்பு மிகுதியாற் பவசமடைந்து இத்தனை பேரிட்டுக் கூவும்படியான வ்யாமோஹம் பெற்றிருக்கிற எமக்கு, பிரிவுக்கு அடியான பாவம் எங்ஙனே உண்டாயிற்றோ தெரியவில்லையே! என்கிறாள். மால் தலைக்கொண்ட – ஆசையின் மேலெல்லையிலே நிற்கிற என்னவுமாம். நாயகனைப் பிரிந்த நாயகி நாயகன் போலிகளை அவனாகவே பாவித்து வாய்பிதற்றுவதை! (திருவாய்மொழி 4-4-4) “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வா வென்று கூவும்” (திருவாய்மொழி 4-4-2). “செய்யதோர் நாயிற்றைக் காட்டிக் கிரீதரன் மூர்த்தியீதென்னும்” என்பவற்றிலும் காண்க.
ஜந்மாந்தஸஹஸ்ரேஷு தபோஜஞாநஸமாதிபி:- நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே.” பாபங்கழியப் பெற்றவர்களுக்கே பகவத பக்தி பிறக்குமென்றும், பகவத் பக்தியுடையாரைப்பாவம் அணுகாதென்றும் சாஸ்திரமிருக்க, அந்தப் பக்தியின் மெலெல்லையிலே நிற்கிற நமக்குப் பேறு பெறாமைக்குக் காரணமான பாவம் வருவதற்கு வழியுண்டோ? என்று ஆழ்வார் வருந்தியுரைத்தாராயிற்று. எம்பெருமான் பக்கலில் மாத்திரமேயன்றி எம்பெருமான் வடிவத்தை யொத்திருக்கும் பொருளிலும் ஈடுபடுதலே பக்தியின் மேலெல்லையாம்.
மூன்றாமடியில், சிஹ்நம் என்றும் வடசொல் சின்ன மெனத்திரிந்தது
English Translation
The Meru mount resembles the Lord Tirumal’s frame. The Sun rising over the mount resembles the beautiful radiant discus in the Lord’s hand. Seeing similar things, we praise the Lord and his symbols alike, with a heart overflowing with love. How can evil ever come upon us?
