(2418)
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், – மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு.
பதவுரை
| வான் |
– |
ஆகாசமும் |
| தீ |
– |
அக்நியும் |
| உலவு வளி |
– |
உலாவுகின்ற வாயுவும் |
| மா கடல் |
– |
பெரிய கடலும் |
| மா பொருப்பு |
– |
பெரிய குலபர்வதங்களும் |
| உலவு |
– |
திரிகின்ற |
| வெம் கதிர்தானும் |
– |
உஷ்ணகிரணனான ஸூர்யனும் |
| தண்மதியும் |
– |
குளிர்ந்த சந்திரனும் |
| மேல் நிலவு |
– |
மேலே நிலாவுகின்ற |
| கொண்டல் |
– |
மேகங்களும் |
| பெயரும் |
– |
சேதநவர்க்கமும் |
| திசை எட்டும் |
– |
எட்டுத் திசைகளும் |
| சூழ்ச்சியும் |
– |
ஆவரணங்களும் |
| அண்டம் |
– |
ஆகிய இவையெல்லாவற்றோடுங் கூடின அண்டமும் |
| திருமால் |
– |
ஸர்வேச்வரனுடைய |
| அகைப்பு |
– |
ஸங்கல்பத்தினாலாயது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பஞ்சபூதங்களும், சந்த்ரஸூர்யர்களும், மேகமண்டலங்களும், ஜீவராசியும், எண்டிசைகளும், ஆவரணங்களும் அண்டமுமெல்லாம் எம்பெருமானுடைய விபூதிகள் என்றாயிற்று.
முதலடியில், வான் என்று ஆகாசமும், தீ என்று தேஜஸ்ஸும், வளி என்று வாயுவும், கடல் என்றதனாலே ஜலதத்துவமும், பொருப்பு என்றதனாலே பூமிதத்துவமும் ஆகப் பஞ்சபூதங்கள் பகரப்பட்டன.
மூன்றாமடியில் “கொண்டல் பெயரும்“ என்றதை ஒரு சொற் செறிவாகக்கொண்டு ‘மேகமென்று பெயர் பெற்றவையும்‘ என்று முரைப்பர்.
அகைப்பாவது எழுச்சி, திருவுள்ளத்தில் எழுச்சி (முயற்சி) யாகிய ஸங்கல்பத்தைச் சொன்னவாறு.
English Translation
The sky, the fire, the oceans, the mountains, the Sun and the Moon, the clouds, the eight Quarters, the whole universe, and all that surrounds it, – all these are manifestations of the lord.
