(2361)
நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,
ஒன்றியவீ ரைஞ்ஞா றுடன்துணிய – வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.
பதவுரை
|
நின்று |
– |
(கூசாமல்) முன்னே வந்து நின்று |
|
எதிர் ஆய |
– |
எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும் |
|
நிரைமணி தேர் |
– |
ஒழுங்காக அழுத்தின மணிகளையுடைய தேரின்மேலேறி யுள்ளவனுமான |
|
வாணன் |
– |
பாணாஸுரனுடைய |
|
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள் |
– |
அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும் |
|
உடன் எக்காலத்தில் |
||
|
துணிய |
– |
அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து |
|
வென்று |
– |
வெற்றி பெற்று |
|
இலங்கும் |
– |
விளங்குகின்ற |
|
ஆர்படு |
– |
கூர்மையையுடைய |
|
வான் |
– |
திவ்யமான |
|
நேமி |
– |
திருவாழியாழ்வானை யுடையவனாய் |
|
அரவு அணையான் |
– |
சேஷசாயியான எம்பெருமானுடைய |
|
சே அடிக்கே |
– |
திருவடிகளிலே |
|
நெஞ்சு தான் |
– |
(எனது) நெஞ்சு தானே |
|
முயலும் |
– |
உத்ஸாஹப் படுகின்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தம்முடைய நெஞ்சு எம்பெருமான் திருவடிகளிற் சென்று சோ உத்ஸாஹங்கொண்டிபடியே அருளிச்செய்கிறார்.
நின்று எதிராய – தாமஸதெய்வத்தைப் பணிந்தவனாகையாலே ஸர்வேச்வானென்று மதியாதே எதிரிட்டு நின்றானென்ப.
‘ஆர்படு‘ என்பதற்கு ‘கூர்மையை யுடைத்தான்‘ என்றும் அரங்களையுடைத்தான‘ என்றும் பொருள் நின்றானென்ப.
English Translation
Our lives will automatically be drawn to the lord who wields a radiant discus. He sliced the thousand arms of the Asura. Bana, who came to war with him on this jewelled chariot.
