(2357)

(2357)

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து

நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா – விருப்புடைய

வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,

அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.

 

பதவுரை

(ஒ உலகத்தவர்களே)

நீர்

நீங்கள்

பொருப்பு இடையே

மலைகளின் நடுவே

நின்றும்

நின்று கொண்டும்

புனல்

நீர்நிலைகளிலே

குளித்தும்

முழுகிக்கொண்டும்

ஐந்து நெருப்பு இடையே

பசுசாக்கி மத்யத்திலே

நிற்கவும்

நின்றுகொண்டும் தவஞ்செய்ய

வேண்டா

வேண்டியதில்லை,

விருப்பு உடைய

(எல்லாராலும்) விரும்பத்தக்கதாயிருக்கின்ற

வெஃகா

திருவெஃகாவில்

சேர்ந்தானை

வந்து கண் வளர்த்தருளும் பெருமானை

மெய்

மெய்யாக (அந்நய ப்ரயோஜநமாக)

மலர் தூய்கை தொழுதால்

புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்

தீ வினைகள்

துஷ்கருமங்களெல்லாம்

ஆய்ந்து

(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து

அஃகாவே

சுருங்கிப்போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில் விளிவருவித்துக்கொள்க. அருமையான தவங்கள் செய்து உடம்பை வருத்துகின்றவர்களே! நீங்கள் மலைமேல் ஒற்றைக்கால் விரலால் நின்றுகொண்டும், மழைகாலத்தில் நீர்நிலைகளிலே மூழ்கிக்கிடந்தும், வேனிற்காலத்திலே பஞ்சாக்நி மத்யத்தில் நின்றுகொண்டும் இப்படிப்பட்ட காயக்லேசங்களுடன் தவம்புரிவதெல்லாம் எதுக்காக? பாவங்கள் தொலைந்து நற்கதி நண்ணவேணுமென்றுதானே இங்ஙனம் தவம்புரிகின்றீர்கள், இனி அங்ஙனம் வருந்தவேண்டா, திருவெஃகா நாயனார் திருவடிகளிலே அந்நயப்ரயோஜநராயப் புஷ்பங்களைப் பணிமாறி ஆச்ரயித்தால் தீவினைகளெல்லாம் தன்னடையே ஓடிப்போய்விடுமே. நமக்காக எம்பெருமான் காயக்லேசங்கள் படாநிற்க நாமும் படாவேணுமோ? என்கிறார்.

பிள்ளைப்பெருமாளையங்கார் இப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி திருவரங்கக் கலபகத்தில் “காயிலைதின்றுங் கானிலுறைந்துங் கதிதேடித், தீயிடைநின்றும் பூவலம்வந்துந் திரிவீர்காள்! தாயிலுமன்பன் பூமகள்நண்பன் தடநாகப் பாயன் மூகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே“ என்றருளிய பாசுரம் நோக்கத்தக்கது.

விரும்புடைய வெஃகா – பகவானுடையவும் பாகவதர்களுடையவும் விருப்பத்திற்குப் பாத்திரமான வெஃகா என்றபடி.

 

English Translation

No need to stand on mountain taps, or in neck-deep water or in the midst of five fires and do penance. Simply worship the Lord of Venkata with fresh flowers and sincere heart All Kamas will vanish.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top