(2284)

(2284)

மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்

தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், – சினத்துச்

செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,

வருநரகம் தீர்க்கும் மருந்து.

பதவுரை

மாகடல் நீர் உள்ளான்

பெரிய திருப்பாற்கடல் நீரிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்

மலராள் தனத்து உள்ளான்

பிராட்டியின் திருமுலைத்தடத்திலே அடங்கிக் கிடப்பவனும்

தண் துழாய் மார்பன்

குளிர்ந்த திருத்துழாயைத் திருமார்பிலணிந்தவனும்,

செருநர்

சத்துருக்கனானவர்கள்

உக

அழியும்படி

சினத்து

சீற்றத்தினாலே

செற்று

த்வம்ஸம்பண்ணி

உகந்த

மகிழ்ந்தவனும்

தேங்கு ஓதம் வண்ணம்

தேங்கின கடல் போன்ற வடிவையுடையவனும்

வரு நாகம் தீர்க்கும் மருந்து

தப்பாமல் நேரக்கூடிய ஸம்ஸாரமாகிற நாகத்தைப் போக்கவல்ல மருந்து போன்றவனுமான ஸர்வேச்வான்

மனத்து உள்ளான்

என்மனத்திலே வந்து சேர்ந்துவிட்டான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானளவிலே பொருந்தினபடியைப் பேசினார், இப்பாட்டில், அப்பெருமான்தானே தம்முடைய மனத்தில்வந்து பொருந்தினமையைப் பேசுகிறார். இப்பாட்டில், மனத்துள்ளான் என்பது வினைமுற்றாக நிற்கக்கடவது. மாகடல் நீரிலும் மலராள் தனத்திலுமிருந்தவன் அவ்விடங்களை விட்டிட்டு என்மனத்திலே வந்து புகுந்தானென்கிறார்.

ஆச்ரிதரக்ஷணத்திற்காகத் திருப்பாற்கடலிலே கிடந்து அவ்விடம்போலே பெரியபிராட்டியார் திருமுலைத்தடத்தையும் ஒரு ஸ்தானமாகவுடையனாய், அவள் மேல்விழுந்து அநுபவிக்கும்படியாகக் குளிர்ந்த திருத்துழாயாலே அலங்க்ருதமான திருமார்பையுடையனாய், ஆச்ரிதர்களுக்கு விரோதிகளாயுள்ளவர்கள் உருவழிந்து ஒழியும்படியாகச் சீறி அவர்களைத் தொலைத்து ‘ஆச்ரிதவிரோதிகள் தொலையப் பெற்றோம்‘ என்று திருவுள்ளமுவந்தவனாய், அந்த உவப்பினால் புகர்பெற்று விளங்குகின்ற வடிவையுடையனாய், அநுபவித்தே தீறவேண்டும்படியான ஸம்ஸாரநரகத்தைக் கடப்பதற்கு அருமருந்தானவன் என்னுடைய நெஞ்சிலேயுள்ளான் என்றாராயிற்று.

மற்ற விசேஷணங்களைப்போலே மனத்துள்ளான் என்பதையும் ஒரு விசேஷணமாக்கி, இப்படிப்பட்ட எம்பெருமான் வருநரகம் தீர்க்கும் மருந்தாயிருப்பன் என்று முடிக்கவுங் கூடுமாயினும் மனத்துள்ளானென முடிப்பதே நன்று பொருந்தும்.

செருநர் – பகைவர். ‘சினத்து‘ என்பதை செருநர்க்கு விசேஷணமாக்கவுமாம், கோபத்தையுடைய பகைவர் என்றவாறு.

 

English Translation

Destroying the angry Asuras with delight, the Lord resides in my heart like a medicine for the ills of karmic hell.  He is the ocean-hued Lord residing in the ocean, the Tulasi garland Lord residing in the heart of the lotus-dame.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top