(2265)

(2265)

வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,

உரம்கருதி மூர்க்கத் தவனை, – நரம்கலந்த

சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,

அங்கண்மா ஞாலத் தமுது.

 

பதவுரை

வரம் கருதி

(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து

தன்னை வணங்காத

(ஸர்வேச்வரனான) தன்னை வண“காதிருந்தவனும்

வன்மை உரம் கருதி

(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து

மூர்க்க தவனை

மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை

நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட

நரசிங்கவுருக்கொண்டு பிளந்தொழிந்த

திருவன்

அழகனுடைய

அடி இணையே

உபயபாதமே

அம் கண் மா ஞாலத்து

அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில்

அமுது

(போக்யமான) அம்ருதமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார்!, “குறைவாக வெஞ்சொற்கள் கூறினேன்“ என்று அநுதாபமாகச் சொல்லிக்கொண்டே மேன்மேலும் கவிபாடாநின்றீரே, உமது சொற்கள் வெஞ்சொற்களாயின் கவிபாடுதலை நிறுத்திக்கொள்ளலாமே‘ என்று சிலர் சொல்லக்கூடு மென்றெண்ணி ஒரு போக்கியமான வஸ்துவைக்கண்டால் நாமும் இதில் சிறிது வாய்வைக்க வேணுமென்று தோன்றுவதுபோல, எம்பெருமான் பரமபோக்ய னென்ற்றிந்தவாறே அதில் வாய்வைக்காதிருக்க முடியவில்லை“ என்று விடையளிக்க விரும்பி இரணியனை நரசிங்க மாகிக்கிழித்த அழகியானுடைய அடியினை இவ்வுலகத்து அமுதம் போன்றுள்ளது என்று பகவத் விஷய போக்யத்தையை பேசுகிறாரிதில்.

நாங்கலந்த சிங்கத்தினால் கிழித்தெறியப்பட்ட இரணியன் எப்படிப்பட்டவனென்றால், அவன் பரம்மூர்க்கனாயிருந்தவனென்பன முன்னடிகள் வரபலத்தினாலம் புஜபலத்தினாலும் மனக் கொடுமையினாலும் வணங்க முடி மன்னனாயிருந்த மூலடக்கனும் இரணியன்.

 

English Translation

The wonder Lord came as a man-lion and fore the chest of the unrelenting foolish king intoxicated by the power of his penance.  That Sri-lord’s lotus feet alone in this whole wide Earth, are sweet as ambrosia.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top