(2263)

(2263)

வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்

படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், – அடிக்கோலி

ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,

கோலத்தா லில்லை குறை.

 

பதவுரை

வடிகோலம்

வடிக்கட்டின அழகையுடையவளும்

வாளநெடுங்கண்

ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்

மாமலராள்

சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்

செல்வி படிகோலம்

சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து

பல் நாள் அகலாள்

க்ஷணகாலமும் விட்டுப்பிரியாமல் எப்போதும் கூடியேயிருக்கின்றாள்

பின்னும்

எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவத்தும்

ஞாலத்தாள்

பூமிப்பிராட்டியானவள்

அடிக்கோலி

பாரித்துக்கொண்டு

நலம் புரிந்தது என் கொலோ

அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக்கொண்டிருப்பது என்னோ

கோலத்தால் குறை இல்லை

(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ.

அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (ளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “நாரணனைக் கண்டேன்“ என்றாரே, ப்ரஹ்மசாரி நாராயணனைக் கண்டேனல்லேன், திருமடந்தை மண்மடந்தைகட்குக் கொழுநனான திருமாலைக் கண்டேனென்கிறார் இதில். இவ்வார்த்தை நேரே அருளிச்செய்யாமல் ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிற அழகு காண்மின்.

பூவிற்பிறந்த பெரிய பிராட்டியார் எம்பெருமானுடைய அளவிறந்த போக்யதையிலே ஆழங்காற்பட்டு ‘உன்னை ஒரு நொடிபொழுதும் விட்டுப்பிரியமாட்டேன். உன்னை ஒரு நொடிப்பொழுதும் விட்டு அகலமாட்டேன்‘ என்றே வாய்வெருவிக்கொண்டு  அவனுடைய போக்யதையாகிற அமுத வெள்ளத்திலே கிடந்து தத்தளிக்கின்றாள். அநுபவத்தில் பெரிய கைகாரியான பிராட்டியின் நிலைமையே இதுவாயின் அவளிலும கீழ்ப்பட்டவளான பூமிப்பிராட்டி ‘நாம் அணுகுவதற்கும் நமக்கு யோக்யதையில்லை, ஒன்றான பிராட்டியே குமிழ் நீருண்ணும் விஷயத்திலே நாம் கைவைக்கத்தகுமோ? என்று உதாஸீநையாய் விலக வேண்டியிருக்கவும் அந்த எம்பெருமான் விஷயத்திலே தானும் அபிநிவேசங்கொண்டு அணுகுகின்றாளே, இஃது என்கொல்?

இதற்குத் தாமே ஸமாதாந மருளிச்செய்கிறார் ஈற்றடியால், (கோலத்தால் குறை இல்லை) உலகத்தில் க்ஷுத்ர விஷயங்களிலே ஒரு வஸ்துவில் ஒருவன் ஆசை வைத்துவிட்டால் அதை மற்றொருவன் ஆசைப்பட நினையாதிருப்பதுண்டு, அதற்குக் காரணம் ஏதென்னில், அந்த விஷயங்களில் போக்யத்தை மிகவும் அறபராகையாலே ஒருவன் அநுபவிப்பதற்கே போதும் போதாதாயிருக்கும், சிறயதொரு குட்டையில் தண்ணீர் குடிக்க ஒருவன் இறங்கினால் “அவ்னொருவனுக்கே போராததான அதிலே நாமும் இற“குவதேன்? என்று மற்றையோர் அதனை உபேக்ஷித்துப் போவர். அதுவே ஒரு பெரு வெள்ளமாயிருந்தால் ‘இஃது எல்லார்க்கும் ஈடு கொடுக்கும்‘ என்று அனைவரும் அதிலே இறங்கி அநுபவிப்பரகள், அதுபோல் பகவத்விஷயமானது “கொள்ளமாளாவின்ப வெள்ளமாதலால் எத்தனைபேர் அநுபவித்தாலும் பாங்காகவே யிருக்குமாகையாலே பூமிப்பிராட்டியும் மேல்விழும்படி யிருக்கின்றது என்று – எம்பெருமானுடைய போக்யதையின் அளவின்மை சொன்னவாறு.

இங்கே வியாக்சியான ஸ்ரீஸூக்தி வருமாறு – “தன்னில் மிடுக்கனானவன் அழுந்தப்புக்கால் கரையிலே நிற்கிறவன் புகாதே போகவன்றோ அடுப்பது, எல்லாரிலும் அளவுடைய பெரியபிராட்டியார் குமிழ் நீருண்ணும் விஷயமானால் இவள் அகலப்பாராதே அகப்படுகைக்கு ஹேதுவென்னென்னில், ஹேது சொல்லுகிறது (கோலத்தால் இத்யாதி). நின்றார் நின்ற நிலைகளில் அகப்பட வேண்டும் அழகு குறைவற்றிருக்கையாலே யென்கை. இதரவிஷயங்கள் இருவர்க்கும் அநுபவிக்கப் போராமையாலே சீறுபாறென்கறது. கிண்ணகத்தி லிழியுமாபோலே எல்லாரும் திறவநுபவிக்க வேண்டும் பரப்பு உண்டாகையாலே இவ்விஷயத்தை யநுபவிப்பார்க்கு ப்ரியமேயுள்ளது.“

வடிக்கோல் வாள் நெடுங்கண் – வடி – கூர்மை பொருந்தியதும், கோலம் – அழசியதுமான, வாள் – வாள்போன்ற நெடுங்கண்களையுடைய மாமலராள என்று முரைக்கலாம். “அடிக்கோலி“ என்பதற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ‘அகலப்பாரித்து‘ என்று பொருள் காண்கிறது. அதாவது ‘இலையகலப் பாரித்து‘ என்றபடி. ச்ரார்த்தத்தில் நிமந்த்ரண் முண்ணப்போகிறவன் ‘அப்படி உண்ணவேணும்‘ இப்படி உண்ணவேணும், வடையை நெய்யில் தோய்த்து உண்ண அதுபோல, பூமிப்பிராட்டியார் எம்பெருமானை அநுபவிப்பதற்கு மநோரதிக்கும் படியை ‘அடிக்கோலி‘ என்றதனால் சொல்லிற்றென்க. அரும்பதவுரைகாரர் “அடிகோலுகை – அகலுக்கு உத்யோகிக்கை“ என்று வரைந்து வைத்தது என்னோ அறியோம்.

 

English Translation

The radiant lotus-dame Lakshmi with beautiful vel-sharp long eyes enjoys the blossom-like beauty of the Lord since time immemorial, yet never satiates.  And over this, Bhu-dame also finds a niche to sit and enjoy the lord.  How so? Because the Lord’s beauty is limitless.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top