(2206)

(2206)

சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,

கொன்ற திராவணனைக் கூறுங்கால், – நின்றதுவும்

வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்

வாயோங்கு தொல்புகழான் வந்து.

 

பதவுரை

விண்ணவர் தம்வாய்

தேவர்களின் வாயினால்

ஓங்குதொல் புகழான்

உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழையுடைய எம்பெருமான்

செவ்வே

நேராக

சென்றது

சீறிச்சென்றது

இலங்கை மேல்

லங்காபுரியின் மேலாகும்;

தன் சீற்றத்தால்

தனக்கு வந்தேறியான கோபத்தால்

கொன்றது

ஸம்ஹரித்தது

இராவணனை

ராவணனையாம்;

கூறுங்கால்

சொல்லுமிடத்து

வந்து நின்றதுவும்

(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து

வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே

மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்” என்பது ஸ்ரீவசநபூஷணம் அதாவது – ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன் தன்னை யழியமாறி மநுஷ்யர்களைப்போன்று அவதரித்துக் கைதொடனாய்நின்று செய்த ராவணாதிநிரஸநரூபமான அதிமாநுஷருத்யங்களெல்லாம் மஹர்ஷிகள் முதலான பாகவதர்திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே என்று நஞ்சீயரருளிச் செய்வராம் திருவாழி யாழ்வானைக் கூட ஏவாமல் ஸங்கல்பமாத்திரத்தாலே காரியஞ் செய்யவல்லமை எம்பெருமானுக்கிருந்தாலும் ஆச்ரிதர்களுக்காகத் தான் உடம்பு நோவக் காரியஞ் செய்தாலன்றித் தனக்கு த்ருப்தி பிறவாதாகையால் தானே  நேரில்வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்கின்றானாம்.  படாதபாடுகள் பட்டு இலங்கையை நோக்கிச் செல்லாமலே “பஸ்மீபவது ராவண:” என்றாற்போன்ற வொரு ஸங்கல்பமாத் கிடத்தாலே இராவணனை நீறாக்கி யொழித்திருக்கலாமே; அப்படியிருக்கவும், வந்து பிறந்து இலங்கையை நோக்கிப் படைதிரட்டிச் சென்றதும் இராவணனைப் போர்க்களத்திலே கொன்றதும் என்னோ?

இராவணன் முதலிய துஷ்டர்களை ஸங்கல்பமாத்திரத்தாலே நிக்ரஹித்து விடக்கூடுமாயினும், “பரித்ராணாய ஸாதூநாம்” என்று சொல்லப்பட்ட ஸாதுபரித்ராணம் (சிஷ்டர்களை வாழ்விப்பது) ஸங்கல்பத்தால் தலைக்கட்டாது; திவ்யமங்கள விக்ரஹத்தினழகைக் கண்ணாரக் காண வேணுமென்றும் அனைத்துக்கொள்ள வேணுமென்றும் அன்பர்கொள்ளும் ஆவலை நேரில் வந்தவதரித்தே தீர்க்கவேணுமேயன்றி  ஸங்கல்பத்தால் தீர்க்கப்போகாதாகையாலே “பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் – தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே” என்று சொல்லப்பட்ட அவதார ப்ரயோஜநங்கள மூன்றனுள் முக்கியமாக ஸாதுபரித்ராண மொன்றுக்காகவே விபவாவதாரங்களும்அர்ச்சாவதாரங்களும் செய்தருள்கிறானென்பதை வெளியிடுதலே இப்பாட்டின் பரமதாத்பர்யமாம்.

விண்ணவர்தம் வாயோங்கு தொல்புகழான் – ராவணஸம்ஹாரம் முடிந்த பின் பிரமன் முதலிய தேவர்கள் வந்து தோத்திரஞ்செய்ததைக் கூறிற்றாகவுங் கொள்ளலாம்.

 

English Translation

Also He is the Lord eternally praised by the celestials. When he came, he marched over Lanka.  When he fought, he killed Ravana. When he stood, it was in the midst of Bamboo thickets in Venkatam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top