(2205)
அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்,
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், – அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத,
சீற்றத்தீ யாவானும் சென்று.
பதவுரை
|
நல்நெஞ்சே |
– |
நல்ல மனமே! |
|
ஆர் அருளும் |
– |
பரிபூர்ணக்ருபையாலே உண்டாகக்கூடிய மோக்ஷமும் |
|
கேடும் |
– |
நிக்ரஹத்தால் வரக்கூடியதான ஸம்ஸாரமும் |
|
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன் |
||
|
அவன் கண்டாய் |
– |
அந்த எம்பெருமானே யாவன்; |
|
ஐம்புலன் |
– |
பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான |
|
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் ; |
– |
பஞ்சபூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானேயாவன்; |
|
கருவரை |
– |
கறுத்த மலைகளும் |
|
(அவன் கண்டாய்) |
– |
அவனேயாம்; |
|
சென்று |
– |
(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து |
|
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும் |
– |
கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நியாகுமவனும் |
|
அவன் கண்டாய் |
– |
அந்த எம்பெருமானேயாம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் தன்னை வணங்கினவர்களை வாழ்விப்பனென்று கீழ்ப்பாசுரத்திலருளிச் செய்த ஆழ்வார். அடியே பிடித்து சேதநனுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு போருகிற எம்பெருமானுக்கு இஃது ஓரேற்றமே வென்கிறார் போலு மிப்பாட்டால்.
ஆரளுங் கேடும் அவன்கண்டாய் இந்த ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பித்தவன் எம்பெருமானேயாதலால் சேதனவர்க்கங்களைக் காக்கவேண்டியதும் அவனுக்குப் பாரமாயிற்று; ஆகவே, கண்ணபிரானே கரணகளேபரங்களைக் கொடுத்து ஸம்ஸாரத்தில் ப்ரவர்த்திப்பித்த அவதாரிகளைத் தன்னுடைய மாயையான ஸம்ஸாரத்தில் நின்றும் மீளச் செய்வானாம் என்றவாறு- மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” என்று …… சோதி வாய்திறந்து பணித்ததும் உணர்க.
English Translation
O Devoted heart! The good and the bad-know that all this is he. The Earth, wind, fire, water and space, -these too are he. He stands as the five senses also.
