(2200)
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, – குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி.
பதவுரை
|
திருமாலே! ; நீ; |
||
|
(கிருஷ்ணசிசுவாயிருந்த போது) |
||
|
வலி சகடம் |
– |
வலிதான சகடத்தை |
|
செற்றாய் |
– |
உதைத்து முறித்துத் தள்ளினாய்; |
|
வழக்கு அன்று கண்டாய் |
– |
இது உனக்குத் தகுதியன்று காண்; |
|
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா |
– |
இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது; |
|
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்) |
||
|
குழ கன்று |
– |
(அஸுரனான) இளங்கன்றை |
|
தீ விளவின் காய்க்கு எறிந்த |
– |
தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட |
|
தீமை |
– |
இந்தத் தீம்பான செயல் |
|
பார் விளங்க |
– |
பூமியிலே பிரகாசிக்கும்படி |
|
பழி செய்தாய் |
– |
தவறு செய்தாய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நந்தகோபார் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே ஒரு தொட்டிலில் தான் கண்வளரும்போது கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அந்த வண்டியில் ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக்கொல்ல முயன்றபோது அதனையறிந்த தான் பாலுக்கு அழுகிற பாவனையிலே தான் சிறிய திருவடிகளை மேலேதூக்கி யுதைத்து அச்சகடத்தை யொழித்தருளினது தன்னைத்தான் காப்பாற்றிக்கொடுத்து உலகத்தை வாழ்விக்கச் செய்த செயலாகிலும், ஸுகுமாரமான கைபடைத்த பிராட்டிமார்களும் தொட்டுப் பிடிக்கப் கூசும்படி அத்தனை ஸுகுமாரகவுள்ள திருவடியைக் கொண்டு ஒரு முரட்டு வண்டியை உதைத்த விது மிகவும் தகுதியற்ற காரியமென்று தோற்றுவது மங்களாசாஸநபரர்களுக்கு ஸஹஜமாதலால் ‘வலிசகடம் செற்றது வழக்கன்று’ என்கிறார் முன்னடிகளில்.
கம்ஸனாலேவப்பட்ட அஸுரர்களில் ஒருவன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ் வரும்போது மேல்விழுந்து கொல்லுவதாக எண்ணி வந்து நிற்க அதனையறிந்த கண்ணபிரான், அவ்வாறே தன்னை முட்டிக்கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு வந்த மற்றோரஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி அவ்விளாமரத்தின்மேல் எறிய, கபித்தாஸுரனும் வத்ஸாஸுரனுமான இருவரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடனே விழுந்து இறந்தனர் என்ற வரலாறு பின்னடிகளில் அறியத்தக்கது. கடினப் பிரகிருதியான அஸுரனை அதிஸுகுமாரமான திருக்கையாலேபிடித்துச் சுழற்றியெறிந்த போது அத்திருக்கைகள் எவ்வளவு öநாந்திருக்குமோ! என்று கொண்ட வயிற்றெரிச்சலால் வழக்கென்று நீ மதிக்கவேண்டா, என்றும் ‘பார்விளங்கத் தீமை செய்தாய்’ என்றும் பழி செய்தாய்’ என்றும் பேசினர்.
English Translation
O Lord Tirumali you wrecked a cart with your petal-soft feet, that was not fair, you swirled a demon-calf and dashed it against a demon wood-apple free, do not think that was fair either. In the eyes of the world you did wrong.
