(2199)
கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிற லோன் மார்வத் துகிர்வைத்தது – உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு.
பதவுரை
|
குறள்உரு ஆய் |
– |
வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து |
|
உலகம் |
– |
பூமி முதலிய லோகங்களை |
|
கொண்டது |
– |
ஆக்ரமித்துக் கொண்டதும், |
|
கோள் அரி ஆய் |
– |
மிடுக்கையுடைய நரசிங்கமாகி |
|
ஒண்திறலோன் மார்வத்து |
– |
மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே |
|
உகிர் வைத்தது |
– |
தனது நகங்களையழுத்திக் கீண்டொழித்ததும் |
|
ஒருநாள் |
– |
ஒருகாலத்திலே |
|
தான் கடந்த |
– |
தான் அளந்து கொண்ட |
|
ஏழ் உலகே |
– |
எல்லாவுலகங்களையும் |
|
உண்டதுவும் |
– |
(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும் |
|
(ஆகிய இச்செயல்கள்) |
||
|
வான் கடந்தான் |
– |
ஆகாசத்தையளவிட்டாலும் அளவிடவொண்ணாதபடியுள்ள பெருமையையுடையவனும் |
|
தாமரை கண் |
– |
செந்தாமரைக் கண்ணனுமாகிய |
|
மால் |
– |
எம்பெருமான் |
|
செய்த |
– |
செய்தருளின |
|
வழக்கு |
– |
நியாயமான செயல்களாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்ரீமந் நாராயணனே ஸர்வஸமாகரயணீயனென்று கீழ்ப்பாட்டிற் கூறியதை நிலைகாட்டுதற்காக அப்பெருமான் தன்னை அழியுமாறியும் ஜகத்ரக்ஷணம் பண்ணுகிறபடியைப் பாருங்களென்கிறாரிதில் உலகத்தில் குள்ளனைக் கண்டால் கண்டவர்களும் ஏசிப் பேசுவது வழக்கம்; அப்படிப்பட்ட குள்ள வடிவைக் கொண்டான் இந்திரன் குறையைத் தீர்ப்பதற்காக அன்றியும் உடல் ஒருபடியும் முகம் ஒருபடியுமாக வடிவெடுப்பதும் பரிஹாஸாஸ்பதம்; அப்படிப்பட்ட வடிவையும் கொண்டான் மூவுலகங்களின் துயர் தொலைக்க. அன்றியும் தன் காலிலேபட்ட வஸ்து அசுத்தமென்று அதை எவனும் உட்கொள்ளமாட்டான்; எம்பெருமானோ வென்னில், த்ரிவிக்ரமாவதாரத்தில் தன்னடிக் கீழ்ப்பட்ட உலகங்களையே (மற்றொரு கால் பிரளயங் கொள்ளாதபடி) உட்கொண்டான். ஆகவே இவ்வளவுஞ் செய்தது தன்னுடைமையைத் தான் நெருக்கிக் கொள்வதற்காகவே யாதலால் இவனே ஸர்வ ஸ்வாமியென்பது திண்ணமன்றோ.
“வான்கடந்தான் செய்தவழக்கு” என்ற ஈற்றடிக்கு இருவகையாகக் கருத்தாகலாம்; தன்னுடைய ரக்ஷகத்வத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிச்செய்த காரியங்களாகையாலே இவையெல்லாம் நியாயமான காரியங்கள் என்பதாகவொரு கருத்து; இனி, வழக்கு என்றது எதிர்மறை இலக்கணையால் வழக்கல்ல என்றபடியாய், சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே உலகங்களை அளந்து கொள்வதும், உலகத்தில் எங்கும் என்றுங் கண்டறியாதவொரு விஜாதீயமான வடிவத்தையெடுத்து இரணியனைப் பிளந்தொழிப்பதும்; தன் காலில்பட்டு அசுத்தமான வுலகத்தைத்தானே உட்கொள்ளுதலும் நியாயமல்லவே! என்றவாறாம். ப்ரேமத்தின் “கனத்தாலே” பக்தர்கள் இப்படி பரிஹாஸமுறையிலே பேசுவதும் பொருந்தும்.
வான் கடந்தான் = வானத்தை அளவிடிலும் அளவிட வொன்ணாத பெருமையை யுடையவனென்றும் ஸ்வர்க்கத்தை யளந்தவனென்றும் பொருளாகலாம்.
English Translation
A graceful manikin received the Earth; a fierce lion fore into Hiranya’s chest; a child swallowed the seven worlds, these are some of the wonders of my lotus-eyed Earth-stradding Lord.
