(218)
தள்ளித் தளிர்நடை யிட்டுஇளம் பிள்ளையாய்
உள்ளத்தி னுள்ளே அவளை யுறநோக்கி
கள்ளத்தி னால்வந்த பேய்ச்சி முலையுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்.
பதவுரை
|
(காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே) |
||
| தள்ளி தளர்நடை இட்டு |
– |
தட்டித்தடுமாறி தளர்நடையிட்டு |
|
(நடக்க வேண்டும்படியான) |
||
| இள பிள்ளையாய் |
– |
இளங்குழந்தையாய் |
|
(இருக்கச் செய்தே) |
||
| கள்ளத்தினால் |
– |
(தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே |
| வந்த |
– |
(தன்னைக் கொல்ல)வந்த |
| பேய்ச்சி அவளை |
– |
பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை |
| உள்ளத்தின் உள்ளே உறநோக்கி |
– |
(’நம்மை நலியவருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப்பார்த்து |
|
(பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே) |
||
| முலை |
– |
அம்முலையை |
| உயிர் துள்ள சுவைத்ததனால் |
– |
(அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ணபிரானால் |
|
இன்று முற்றும் |
||
| துவக்கு அற |
– |
(அம்முலையில் தடவிக்கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி |
| உண்டானால் |
– |
(அம்முலையிற் பாலை) உண்ட கண்ணபிரானால் |
|
இன்று முற்றும் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் தரையிலே காலூன்றி நடக்க மாட்டாத இளங்குழந்தையாய் இருக்கச்செய்தேயே அநாயாஸமாக விரோதி நிரஸ்நம் பண்ணினவனாயிருந்துவைத்து, பருவம் முற்றமுற்ற ஆச்ரிதைகளான எங்களுக்குத் தீமை செய்ய தலைப்படுவதே என்று வயிறெரிந்து முறைப்படுத்தப்படுகின்றனர். உள்ளத்தின் உள்ளே-இவள் நம்மை நலிய வருகின்றாள் என்று-தான் தெரிந்து கொண்டதை வெளிப்படுத்தினாள், வந்த பூதனை அஞ்சி ஓடிப் போய் விடுவாளென்று உள்ளத்தின் உள்ளே அவளை உறநோக்கினான். ’சுவைத்தான்’ என்ற சொல்நயத்தினால்-விஷந்தடவின அம்முலையைத் தானுண்ணும்போது மாம்பழக்கதுப்பு செப்புமா போலே ரஸ்யமாக உறிஞ்சியுண்டான் என்பது போதரும்; விஷமுண்டால் சிறிது வருத்தமாயினும் உண்டாகக்கூடுமன்றோவென்று சங்கித்து, அக்கண்ணபிரானுக்கு அது லேசமுமில்லை யென்பதைக் காட்டும் “துவக்கறவுண்டானால்“ என்பது.
English Translation
He was a toddler barely able to walk a step. Deep from his heart he took a good look at her. She was an ogress disguised as a midwife. He sucked her breast and drew her life out. Today we are finished,–unharmed by the poison he drank,–O, We are finished.
