(217)

(217)

ஆய்ச்சியர் சேரி அளைதயிர் பாலுண்டு

பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு

வேய்த்தடந் தோளினார் வெண்ணெய்கொள் மாட்டாது அங்கு

ஆப்புண் டிருந்தானால் இன்று முற்றும் அடியுண் டழுதானால் இன்று முற்றும்.

பதவுரை

ஆய்ச்சியர் சேரி

இடைச்சேரியிலே

(இடைச்சிகள் கடைவதாக)

அளை

(மத்தை நாட்டி) உடைத்த
தயிர்

தயிரையும்
பால்

(காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்
உண்டு

அமுது செய்து

(அவ்வளவோடு திருப்தியடையாமல்)

பேர்ந்து

பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே)
அவர்

அவலிடைச்சிகள்

(ஒளிந்திருந்து)

கண்டு

(இவன் திருடுகின்றபோதில்) கண்டு
பிடிக்க

(இவனைத் தங்கள் கையில்)அகப்படுத்திக்கொள்ள
பிடியுண்ட

(அவர்கள் கையில்) பிடிபட்டு

(அதற்கு தப்பமாட்டாமல்)

வெண்ணை

வெண்ணெயை
கொள்ளமாட்டாது

(தான் நினைத்தபடி) கைக்கொள்ளமாட்டாமல்
அங்கு

அவர்கள் வீட்டில்
ஆப்புண்டு இருந்தானால்

கட்டுண்டிருந்த கண்ணபிரானால்

இன்று முற்றும்

அடியுண்ட அமுதினால்

(அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால்

இன்று முற்றும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***–’பழநாளைத்திருடன் ஒருநாளைக் ககப்படுவான்’ என்னும் பழமொழியை இரண்டாமடியில் நினைக்க. ஆலைத்தயிர்-தன் ஆவலின் அளவுக்கேற்ப தடாவினில் தன் கையில் உள்ள போகவிட்டு அளைகைக்கு உரிய தயிர் என்னவுமாம். வேய்ந்தடந்தோளினார்-ஸர்வசக்தனான ஸர்வேச்வரனுக்கு இடைச்சிகள் கையில் பிடியுண்டு ஆப்புன்னகையைத் தப்பிப்போதல் அரிதன்றே யாயினும் அங்ஙன் தப்பிப்போகாமல், அவர்கள் படுத்தின பாட்டுக்கெல்லாம் இசைத்திருந்தது அவ்விடைச்சிகளின் வேய்ந்தடந் தோளினழகைக் கண்டு கொண்டிருக்கைக்காகவென்க. கொள்மாட்டாது-கொள்ளமாட்டாது; கொள்-முதனிலை.

English Translation

He gobbled the village cowherd women’s milk and curds; was caught red handed, and prevented from stealing butter by being bound in the homes of maids with beautiful arms. Today we are finished,–by the lord who wept as he was beaten,–O, We are finished.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top