(2174)

(2174)

வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச

எயிறிலக வாய்மடுத்த தென்நீ, – பொறியுகிரால்

பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்

சேவடிமே லீடழியச் செற்று.

பதவுரை

பூ வடிவை ஈடு அழித்த

புஷ்பத்தின் ஸுகுமாரத் தன்மையை அடியோடு போக்கிய [ மிகவும் ஸுகுமாரமான]
பொன் ஆழி கையா

அழகிய திருவாழியைக்கொண்ட திருக்கையையுடையவனே!
வயிறு அழல

(என்ன தீங்கு நேருமோவென்று அநுகூலர்) வயிறெரியும்படி
வாள் உருவி வந்தானை

வாளை உருவிக்கொண்டு வந்தவனான ஹிரண்யனை
அஞ்ச

(அவன் உன் வடிவத்தைக்கண்டு) நடுங்கும்படி
நின் சேவடி மேல்

உனது திருவடிகளின்மேலே

(போட்டுக்கொண்டு)

பொறி உகிரால்

நாநாவர்ணமான நகங்களினால்
ஈரு அழிய செற்று

கட்டுக்குலைந்து போம்படி கொன்று

(பின்னையும் சீற்றம் மாறாமையால்)

எயிறு  இலக

பற்கள் வெளித்தெரியும்படி
நீ வாய் மடித்தது

நீ வாயை மடித்துக் கொண்டிருந்தது
என்

ஏதுக்காக?.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- புஷ்பத்தைக் காட்டிலும் மிகவும் ஸுகுமாரமான திருக்கையினால் முரட்டுடம்பனான இரணியனைத்தொட்டுப் பிடித்திழுத்து ஆச்ரிதர்கட்கு ப்ராப்யமான திருவடிகளின் மேலே போட்டுக்கொண்டு மார்வைப் பிளந்தொழித்த பின்பும் பிரானே! நீ உனது பற்கள் வெளித்தெரியும்படி நாவை மடித்துக்கொண்டிருந்தது ஏதுக்காக? ஆச்ரித விரோதி முடிந்துபோன பின்பும் வெகு நாழிகை வரையில் சீற்றம் மாறாதேயிருந்தது ஏன்! என்று கேட்கிறவிதன் கருத்து யாதெனில்; எம்பெருமான் ஆச்ரித விரோதிகளின்மீது கொள்ளும் கோபமே சாணகதர்க்குத் தஞ்சமாவது என்ற அர்த்தத்தை காட்டினபடியாம். திருமங்கையாழ்வாரும் “கொடியவாய் விலங்கினுயிர் மலங்கக் கொண்ட சீற்றமொன்றுண்டுளதறிந்து உன்னடியனேனும் வந்தடியிணையடைந்தேனணி பொழில் திருவரங்கத் தம்மானே!”  என்றருளிச்செய்தது காண்க: அவ்விடத்து வியாக்யானத்திலே “தரித்ரனானவன் தநிகனையடையுமாபோலே ‘ சீற்றமுண்டு’ என்றாய்த்து இவர் பற்றுகிறது;… விரோதி நிரசநத்துக்குப் பரிகரமிறே சீற்றம்” என்று பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்துள்ளதும் குறிக்கொள்ளத்தக்கது.

எயிறிலகவாய்மடித்ததென்? என்ற  இக்கேள்விக்கு வாய்த்த உத்தரம்:- ஆச்ரிதவிரோதி விஷயதிலுண்டான இப்படிப்பட்ட அளவுகடந்த சீற்றமே உலகட்கெல்லாம் தஞ்சமென்று மற்றும்பல பக்தர்களுக்குக் காட்டுதற்காகவாம் என்பது.

“பொன்னாழிக் கையால்” என்றும் பாடமாம்.

English Translation

His stomach burning with anger, the mighty Hiranya came armed with a sword.  O Lord of flower-like hands wielding a golden discus! You plaed him on your lap and tore into him with your nails, then dipped your mouth into his gore, and displayed your sharp brilliant teeth frighteningly. Why, your eyes shone like fire!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top