(2172)

(2172)

ஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,

ஞானச் சுடர்கொளீஇ நாடோறும், – ஏனத்

துருவா யுலகிடந்த வூழியான் பாதம்,

மருவாதார்க் குண்டாமோ வான்.

பதவுரை

ஊனக் குரம்பையின்

மரம்ஸத்தினாலாகிய (சரீரமாகிற) குடிசையிலே
உள் புக்கு

உள்ளே பிரவேசித்து [அதாவது- சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற் படியும்படி அதை நன்றாக ஆராய்ந்து]
இருள் நீக்கி

(நினைக்கிற அஜ்ஞாநமாகிர) இருட்டைப் போக்கி
ஞானம்

தத்வஜ்ஞாநமாகிற
சுdடர்

விளக்கை
கொளீஇ

ஏற்றி
ஏனத்து உரு ஆய்

வராஹரூபியாகி
உலகு இடந்த

(பிரளயங்கொண்ட) பூமியைக்குத்தி யெடுத்துக் கொணர்ந்த  ஊழியான் -எம்பெருமானுடைய
பாதம்

திருவடிகளை
நாள்தோறும்

எப்போதும்
மருவாதார்க்கு

ஸேவியாதவர்களுக்கு
வான் உண்டாமோ

பரமபதம் கிடைக்குமோ?[கிடைக்கமாட்டாது.]

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் நரஸிம்ஹாவதார ப்ரஸ்தாவத்தினால் அவ்வவதாரத்திற்கு முந்தின வராஹாவதாரம் ஸ்மரிக்கப் பட்டதாகி அதனைப்பேசி யநுபவிக்கிறார். “ஊனக்குரம்பையினுள்புக்கு” என்றது- “தீண்டா வழும்புஞ் செந்நீருஞ் சீயு நரம்புஞ் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்” என்று பரமஹேயமாகச் சொல்லப்பட்டும் காணப்பட்டு மிறாக்கின்ற சரீரத்தின் தோஷங்களை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து என்றபடி. இருள் நீக்கி-சரீரமே போக்யமென்று நினைக்கிற அஜ்ஞாநத்தை இங்கு இருளென்றார்; சரீரத்தின் தோஷமெல்லாம் மனத்திற்படியவே இந்த அஜ்ஞாநம் நீங்குமென்க. அஜ்ஞாநவிருள் நீங்கிற்றென்றால் ஞானச்சுடர் தன்னடையே கொழுந்துவிட்டோங்குமாதலால் அதனை இரண்டாமடியிலருளிச்செய்தார். ஆக, சரீரத்தைப்பற்றின அஜ்ஞாநம் தொலைந்து ஆத்மாவைப்பற்றின ஸத்ஜ்ஞாநம் திகழ்ந்து ஞானப்பிரானது திருவடிகளையடைந்தது வாழுமவர்கட்கே வானுலகம் எய்தலாகும்; மற்றையோர்க்கு அஃதில்லை என்றதாயிற்று. சுடர் கொளீ இ-சுடர் கொளுவி; சொல்லிசையளபெடை. உலகமெல்லா மழிந்த யுகாந்த காலத்திலும் தான் இவற்றை ஸத்தையழியாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவன் என்னுங் காரணத்தினால் எம்பெருமானுக்க்கு ஊழியானென்று பெயராயிற்று.

English Translation

The feet of the First Lord who came as a boar and lifted the Earth are like a lamp unto the heart, lit inside the hut of the body flesh, dispelling darkness through knowledge.  For those who do not contemplate him everyday, where is liberation?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top