(2166)
படிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்
கொடிகண் டறிதியே? கூறாய், – வடிவில்
பொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,
நெறிநின்ற நெஞ்சமே நீ.
பதவுரை
|
பொறி ஐந்தும் |
– |
பஞ்சேந்திரியங்களையும் |
|
(வெளியில் மேயவொட்டாதபடி) |
||
|
வடிவில் உள் அடக்கி |
– |
சரீரத்திற்குள்ளே அடங்கியிருக்கச்செய்து |
|
போதொடு நீர் ஏந்தி |
– |
(திருவாராதன ஸாமக்ரியான) புஷ்பங்களையும் தீர்த்தத்தையும் தரித்துக்கொண்டு |
|
நெறி |
– |
ஆச்ரயிக்கும் மார்க்கத்திலே |
|
நின்ற |
– |
நிலைத்து நின்ற |
|
நெஞ்சமே |
– |
மனமே! |
|
நீ |
– |
நீ |
|
பாம்பு அணையினான் |
– |
சேஷ்ஷாயியான பெருமானுடைய |
|
புள் கோடி |
– |
கருடப்பறவையாகிற த்வஜத்தை |
|
கண்டு |
– |
ஸேவித்து |
|
அறிதியே |
– |
அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? (அன்றி) |
|
படி |
– |
அவனது திருமேனியை |
|
கண்டு அறிதியே |
– |
ஸேவித்து அநுபவித்து அறிந்திருக்கிறாயோ? |
|
கூறாய் |
– |
சொல்லு |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “பிரானுன் பெருமை பிறராரறிவார்” என்று ஆழ்வார்ருளி செய்யவே, அவரது நெஞ்சானது “பிறராரறிவாரென்று சொல்லுவானேன்? நானறிந்திருக்கிறேனே:” யென்று அபிப்ராயங்காட்ட; நெஞ்சே! நீயும் இந்திரியங்களை வென்று ஆச்ரயனத்திலே இழிந்தாயத்தனையல்லது இன்னமும் அவன் படிகளை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றாயில்லையே; அப்படி ஸாக்ஷாத்கரித்திருப்பாயேல், அப்பெருமான் பெரிய திருவடியாகிற த்வஜத்தை யெடுத்துப் பிடித்துக்கொண்டு ஆச்ரிதரக்ஷணார்த்தமாக எழுந்தருளும்படியை ஸேவிக்கப் பெற்றாயோ? அன்றி, அவன் திருவனந்தாழ்வா நநுபவிக்குபடி தனது திருமேனியைத் தந்தவண்ணமாக யோகநித்திரை செய்தருளும்படியை ஸேவிக்கப்பெற்றாயோ? ஏதேனும் ஸேவிக்கப்பெற்ற துண்டாகில் சொல்லிக்காண் என்கிறார்.
இதனால், எம்பெருமான் கருடாரூடனாயும் சேஷசயனனாயும் ஸேவை ஸாதிக்கப்பெறுதலில் தமக்கு ஆசை கரைபுரண்டிருக்கும்படியை வெளியிட்டாராகிறார்.
English Translation
Glorious is the serpent-reclining form of the Lord, -can you see him. O Heart? Tell me, can you at least see his Garuda banner? Subduing the senses, steadying the mind, you have worshipped him with pure water and flowers.
