(207)
போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல கத்தார்ஏதேனும் பேசநான் கேட்க மட்டேன்
கோது கலமுடைக் குட்ட னேயா குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா
வேதப் பொருளே என்வேங்கடவா வித்தக னேஇங்கே போத ராயே.
பதவுரை
| கோதுகலம் உடை |
– |
(எல்லாருடைய) கொண்டாட்டத்தையும் (தன்மேல்) உடைய |
| ஓ குட்டனே |
– |
வாராய் பிள்ளாய்! |
| குன்று |
– |
(கோவர்த்தனம் என்னும்) மலையை |
| எடுத்தாய் |
– |
(குடையாக) எடுத்தவனே! |
| குடம் ஆடு கூத்தா |
– |
குடக் கூத்தாடினவனே! |
| வேதம் |
– |
வேதங்களுக்கு |
| பொருளே |
– |
பொருளாயிருப்பவனே! |
| என் வேங்கடவா |
– |
‘என்னுடையவன்’ என்று அபிமாநிக்கும்படி திருமலையில் நிற்பவனே! |
| வித்தகனே |
– |
வியக்கத் தக்கவனே! (நீ) |
| இங்கே |
– |
என்னருகில் |
| போத கண்டாய் போதர் கண்டாய் |
– |
விரைந்து ஓடிவா; |
|
(என்று யசோதை அழைக்க, அவன் ‘வரமாட்டேன்’ என்ன; |
||
| போதரேன் என்னாதே |
– |
‘வரமாட்டேன்’ என்று சொல்லாமல் |
| போதர கண்டாய் |
– |
(இசைந்து) வருவாயாக; |
|
(என்று யசோதை வேண்டியழைக்க, கண்ணன் ‘நீ இங்ஙனே வருந்தியழைப்பது ஏதுக்காக?’ என்ன 😉 |
||
| அசல் அகத்தார் |
– |
அசல் வீட்டுக்காரர்கள் |
| ஏதேனும் |
– |
இன்னது என்று எடுத்துக்கூற ஒண்ணாபடியுள்ள சில கடுஞ்சொற்களை |
| சொல்லி |
– |
(உன்னை நோக்கித் தம்மிலே தாம்) சொல்லிக்கொண்டு |
|
(அவ்வளவோடும் நில்லாமல்) |
||
| ஏதேனும் |
– |
(என் காதால் கேட்கவும் வாயாற்சொல்லவு மொண்ணாத) சில பழிப்புகளை |
| பேச |
– |
(என் பக்கலிலே வந்து) சொல்ல |
|
(அவற்றை) |
||
| நான் |
– |
(உன்மீது பரிவுள்ள) நான் |
| கேட்க மாட்டேன் |
– |
கேட்டுப் பொறுக்க மாட்டேன் |
|
(ஆதலால்,) |
||
| இங்கே போதராய் |
– |
(அவர்களின் வாய்க்கு இரையாகாமல்) இங்கே வருவாயாக, (என்றழைக்கிறாள்.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்- என்று கீழ்ப்பாட்டில் வேண்டினபடிக் கிணங்க அவள் தன் மகனை யழைக்கின்றாள். ‘கோதரு’ என்கிறவிது போதர் என்று குறைந்து கிடக்கிறது; ‘போ’ என்னும் வினைப்பகுதி ‘தா’ என்னுந் துணைவினையைக் கொள்ளும்போது வருதல் என்ற பொருளைக் காட்டுமென்பர்: ‘போதந்து’ என்கிறவிது ‘போந்து’ என மருவி, ‘வந்து’ என்னும் பொருளைத்தருதல் அறிக. கோதுகலம் – ‘கௌதூஹலம்’ என்ற வடசொல் விகாரம். இங்கு, ‘கோதுகலமுடை’ என்பதற்கு (‘எல்லாருடைய) கௌதூஹலத்தை(த் தன்மேல்) உடைய’ என்று பொருளாய், எல்லாராலும் விரும்பத்தக்க (குணங்களையுடைய)வனே! என்று கருத்தாம். இப்படி அனைவராலுங் கொண்டாடத் தக்கவனாயிருந்து வைத்து இன்று எல்லாராலும் பழிக்கப்படுவதே! என்றிரங்கி ஓ! என்கிறாள். குடமாடு கூத்தா – குடமெடுத்தாடின கூத்தையுடையவனே! என்றபடி: குடக்கூத்தின் வகையைக் “குடங்களெடுத்தேறவிட்டு!- என்ற பாட்டின் உரையில் காண்க. வேதப்பொருள் – வேதங்களாற் புகழ்ந்து கூறப்படுபவனென்று கருத்து.
English Translation
“O Celebrated little one, O Pot-dancer, O Substance of the Vedas! My Lord of Venkatam, Wonder-Lord! You held a mount against a hailstorm. Come here now, do not say you won’t. When the neighbours say something and speak something else, I will not bear it. Come here right now!”
