(2056)
ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.
பதவுரை
ஒரு கால் |
– |
ஒரு திருவடியானது |
ஒண் மிதியில் |
– |
அழகாக ஓரடியிட்ட மாத்திரத்தில் |
புனல் உருவி நிற்ப |
– |
ஆவரண ஜலத்தளவும் ஊடுருவிச்சென்று |
(அப்புறம் போக இடம்பெறாமையாலே) நிற்க, |
||
ஒரு காலும் |
– |
மற்றொரு திருவடி |
காமரு சீர் அவுணன் |
– |
நல்லபாக்யசாலியான மஹாபலியானவன் |
உள்ளத்து எண்மதியும் கடந்து |
– |
தன்னெஞ்சிலே நினைத்திருந்த நினைவைக் கடந்து |
அண்டம் மீது போகி எழுந்து |
– |
அண்டபித்திக்கு மப்பால் செல்லக்கிளம்பி |
இரு விசும்பின் ஊடு போய் |
– |
பெரிய ஆகாசத்தையும் ஊடுருவிச்சென்று |
கதிரவனும் ஸூரியமண்டலத்தையும் |
||
மேலே தண் மதியும் |
– |
அதற்கும் மேற்பட்ட குளிர்ந்த சந்திரமண்டலத்தையும் |
தவிர ஓடி |
– |
கடந்து சென்று |
தாரகையின் புறம் தடவி |
– |
(அதற்கும் மேற்பட்ட) நக்ஷத்ரமண்டலத்தையும் கடந்து |
அப்பால் மிக்கு |
– |
அவ்வருகே பிரமலோகத் தளவும் வியாபித்து நிற்க |
மண் முழுதும் |
– |
பூலோகம் முதலான பதினான்கு லோகங்களையும் |
அகப்படுத்து நின்ற எந்தை |
– |
ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட |
எந்தை |
– |
எம்பெருமானுடைய |
மலர் புரையும் திரு அடியே |
– |
தாமரை மலரையொத்த திருவடிகளையே |
வணங்கினேன் |
– |
வணங்கப்பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “மந்திரத்தால் வாழுதியேல்” என்று திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை ஸ்மரித்தார்; அதில் நாராயண நாமத்தின் பொருளான வ்யாபகத்வத்தை த்ரிவிக்ரமாவதாரத்திலே யிட்டு அநுபவிக்கிற பாசுரம் இது.
(ஒருகால் ஒண்மிதியில் புனலுருவி நிற்ப.) ஒரு திருவடியானது பூமியளவாதல் ஸப்த ஸாகரங்கள்ளவாதல் ஸப்தத்வீபங்களளவாதல் சக்கரவாள கிரியளவாதல் மஹா ஜலத்தள வாதல் அண்ட கடாஹத்தளவாதல் செல்லுகையன்றியே ஆவரண ஜலத்தளவுஞ் சென்று நின்றதாம். ரக்ஷ்யவர்க்கமெல்லாம அண்டகடாஹத்தினுள்ளே யன்றோ வுள்ளது, அதற்கு மப்பால் செல்லவேண்டுவானென் என்னில்; ரக்ஷகனுடைய ரக்ஷணப் பாரிப்பு ரக்ஷய வஸ்துவலினளவன்று, அதனிலும் விஞ்சியது என்று காட்டுகிறபடி. ”சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிற் பெரும் பாழேயோ“ என்று தொடங்கித் தத்வத்யத்தையுஞ் சொல்லி ”சூழ்ந்ததனிற் பெரிய என்னவா” என்று அதனிலும் விஞ்சினதாகவன்றோ ஆழ்வாருடைய ஆசையளவு சொல்லப்பட்டது; எம்பெருமானுடைய வாத்ஸல்யம் இதனிலுங் குறைந்து விடுமோ? உலகமுள்ள வளவையும் மீறிச் செல்லுகி்ன்றது ரக்ஷகனான எம்பெருமானுடைய பாரிப்ப. ஆகவே அண்ட கடாஹத்துக்குமப்பால் ஆவரண ஜலத்தளவும் ஒரு திருவடி ஊடுருவிச் சென்றதென்க. ஆக, பூமியையளந்த திருவடியை அநுபவித்துப் பேசினாராய், இனி மேலுலகங்களை யளந்த மற்றொரு திருவடியின் செயலைப் பேசுகிறார் ஒருகாலும் என்று தொடங்கி. ‘திருவடி‘ என்று கௌரவித்துச் சொல்லவேண்டியிருக்க ‘கால்‘ என்கிறாரே, இதுவென்? என்னில்; முதற்பாட்டில் ”தளிர்புரையுந் திருவடி என்தலைமேலவே” என்றும், இப்பாட்டிலும் ”மலர்புரையுந் திருவடியே வணங்கினேனே” என்றும் அருளிச் செய்கிற ஆழ்வார் இங்குக் கால் என்றது வெறுமனன்று; ஒரு கருத்துத்தோன்றவே இப்படியருளிச் செய்தது; அதாவது, ஸம்ஸாரிகளின் அபிப்பிராயத்தாலே சொல்லுகிறபடி; உலகளந்த காலத்தில் திருவடி எல்லார் தலையிலும் பட்டபோது ஸம்ஸாரிகள் ‘ஒருவருடைய கால் நம் தலையிலே பட்டதே“ என்று வெறுத்திருந்ததத்தனை யொழிய ”கோலமாமென் சென்னிக்கு உன்கமலமன்ன குலைகழலே” என்றாற் போலே உகந்து கொண்டார்களில் லையே; அன்னவரது கருத்தாலே கால் என்றது.
(காமருசீரவுணனுள்ளத் தெண்மதியுறங் கடந்து) வாமனன் ‘மூவடி நிலம் தா‘ என்று கேட்டவாறே ‘மூவடிநிலந்தானே இவன் கேட்பது, அதைக்கொடுப்போம்; அதுதவிர மற்ற நிலமெல்லாம் நம்மதுதானே‘ என்றிருந்தான் மாவலி; மூவடி மண் இரந்துபெற்ற வாமனன் பூமியையடங்கலும் அளந்தவாறே ‘பூமிபோனாலும் மேலுலகமெல்லாம் நம்மது தானே‘ என்றிருந்தான்; மேலுலகத்தையு மளந்தவாறே, எண்டிசையுங் கீழும்மேலும் முற்றவுமிழந்தோமே! என்று வருந்தினானாயிற்று. இதுவே ‘அவுணனுள்ளத் தெண்மதியுங்கடந்து‘ என்றதன் கருத்து. மஹாபலியை ஜ்ஞாதாக்க ளெல்லாரும் அஹங்காரியென்றும் பகவத் விபூதியைக் கொள்ளை கொண்டவனென்றும் நிந்தியாநிற்க, இவர் ”காமசீரவுணன்” என்று புகழ்ந்து பேசுவானென்னென்னில்; அவ்வவதாரத்திற்குப் பிற்பட்டுப்போன நம்மைப்போலன்றியே ஸ்ரீவாமநனுடைய வடிவழகையும் சீலத்தையும் கண்ணாலே காணப்பெற்றவனன்றோ மாவலி; இவனைப்போலே பாக்யசாலியுண்டோ? என்னுங்கருத்தாலே அருளிச்செய்கிறபடி. இங்கே வியாக்கியான வாக்கியங்காண்மின்;-“நானும் அடியேனென் றிருக்கிறதை விட்டு பகவத் விபூதியை அபஹரித்து ஔதார்யத்தை யேறிட்டுக்கொண்டு யஜ்ஞத்திலே இழியப்பெற்றிலேனே! என்கிறார்“ என்பதாம். “ஐயோ! நான் காளிய நாகமாகப் பிறவாதொழிந்தேனே; பிறந்திருந்தேனாகில் கண்ணபிரானுடைய திருவடியைச் சென்னிமேற் கொண்டிருப்பேனே“ என்று ஸுந்தரபாஹுஸ்தவத்தில் ஆழ்வான் அருளிச் செய்ததை நினைப்பது.
(அண்டமீதுபோகி இருவிசும்பினூடுபோயெழுந்து) ‘போகி‘ என்றதை ‘போக‘ என்னும் எச்சத்திரிபாகக் கொண்டு ‘எழுந்து‘ என்றதை அதனோடு அந்வயித்துக் கொள்ளவேணும். அண்டத்திற்கு அப்பால் போவதாகக் கிளம்பி ஆகாசத்தின் மேலேபோய்‘ என்றவாறு. இவ்விடத்தில் ”இருவிசும்பினூடுபோய்“ என்றவளவு போதுமே “அண்டமீதுபோகி யெழுந்து” என்பது வேணுமோ? என்னில்; “ஸ்ரீவாமனனுடைய விஜயத்தில் தமக்குண்டான ஆதராதிசயத்தாலே அளக்கும் ப்ரதேசத்ததுக் கொண்டைக்கோல் நாட்டுகிறார்“ என்பர் பெரியவாச்சான்பிள்ளை.
மேலே அதிக்ரமித்துச்சென்ற விடங்களைச் சொல்லுகிறது மேலைத்தண்மதியும் என்று தொடங்கி. அந்தரிக்ஷத்துக்கு மேலெல்லையாய் ஸ்வர்க்கத்துக்குக் கீழெல்லையாயிருக்கும் ஆதித்யபதம்; அதற்குமேலே நூறாயிரக்காதவழியுண்டு சந்திரபதம்; அதுக்குமேலே நூறாயிரக் காதவழியுண்டு நக்ஷத்ரபதம். அதற்கு மேலும் ஓங்கிச்சென்றதாயிற்று திருவடி.
ஸூர்யமண்டலங் கடந்தபின் சந்திரமண்டலமாயிருக்க, இங்குத் ”தண்மதியுங் கதிரவனும்” என்று சந்திரமண்டலத்தை முந்துறச் சொல்லுவானென்? எனில்; அஹங்காரிகளாய் மிகவும் விமுகராயிருக்கும் ஸம்ஸாரிகளின் தலையிலே ஸூகுமாரமான திருவடியை வைக்கையாலே அத்திருவடிக்குண்டான வெப்பந்தீர சைத்யோபசாரம் பண்ணவேணுமென்று திருவுள்ளம்பற்றி முந்துறச் சந்திர மண்டலத்தைப் பேசுகிறாரென்று ரஸோக்தியாக அருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.
English Translation
With one foot washed by the waves of the ocean, and one foot lifted over the Earth, into the wide space, leaving the Moon and sun for below, extending into the reaches of the constellations and father, beyond the good Asura Mabli’s imagination, the Lord straddled the Universe, I worship his lotus feet.