(2013)
நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்,
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை,
தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை,
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.
பதவுரை
|
நீள்வான் |
– |
நீண்டு வளர்வதற்காக |
|
குறள் உரு ஆய் |
– |
வாமநலேஷதாரியாய் |
|
நின்று |
– |
(யஜ்ஞசாலையிலேவந்து) நின்று |
|
மாவலி |
– |
மஹாபலியினிடத்தில் |
|
மண் |
– |
(மூவடி) மண்ணை |
|
இரந்து |
– |
யாசித்து |
|
தாளால் |
– |
திருவடிகளாலே |
|
அளவு இடம் |
– |
அளந்து கொண்டவனும் |
|
தக்கணைக்கு மிக்கானை |
– |
அக்ரதாம்பலமளிப்பதற்குச் சிறந்தவனும் |
|
தோளத மா மணியை |
– |
துளைபட்டு ஒளிமழுங்காத நீலமணி போன்றவனும் |
|
தொண்டர்க்கு இனியானை |
– |
பக்தர்களுக்குப் போக்யனுமான எம்பெருமானை |
|
கேளா |
– |
கேட்கப்பெறாத |
|
செவிகள் |
– |
காதுகள் |
|
செவி அல்ல |
– |
காதுகளேயல்ல |
|
கேட்டோம் |
– |
(இதை நாம் பெரியோரிடத்துக்) கேட்டிருக்கின்றோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய திருப்புகழ்களைக் கேட்பதே செவிபடைத்ததற்குப் பயனாதலால் அப்படி கேட்கப் பெறாத செவிகள் செவியல்ல; நிலத்திலுள்ள பாழிகளோடு அவற்றோடு ஒரு வாசியில்லை யென்றவாறு.
நீள்வான் குறளுருவாய்-புலி சிங்கம் முதலியவை உடலைச் சுருக்கிக்கொண்டு பதுங்கி நிற்பது எப்படி பாய்வதற்காகவோ அப்படியே எம்பெருமானும நீளுகைக்காகவே குறளுருவாயின னென்க.
தக்கணைக்கு மிக்கான்-;உக்ஷிணர் என்னும் வடசொல் தக்கணையெனத்திரிந்தது தக்ஷிணைக்கு மிகச் சிறந்தவனென்றது பரமபூஜ்யனென்பதைச் சொன்னபடி. தருமபுத்திரருடைய ராஜஸூயயாகத்திலே இது தெளிவாம்.
தோளாத மாமணியை-ரத்னத்திற்குத் துளைவிட்டால் நூல் நுழைத்து அநுபவிக்கப்படுவதாகும்; அப்படி அநுபவிக்கப்பட்டு ஒளி குன்றப்பெறும் ரத்னம்போலன்றியே பெட்டியிலிட்டுக் காணவேண்டும்படியான ரத்னம்போலே ஒளிமல்கப் பெற்றிருக்குந் தன்மையைச் சொன்னபடி. “ ????????????? அநாவித்தம் ரத்நம்” என்ற சாகுந்தலநாடக ச்லேகமு முணர்க.
‘தொண்டர்க்கினியானைக் கேளாச் செவிகள்’ என்றது தொண்டர்க்கினியானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதி விஸ்தரங்களை இதிஹாஸ புராணாதிமுகமாகக் கேட்கப் பெறாத செவிகள் என்றபடி.
கேட்டாம் – கேட்டோம்.
English Translation
The Manikin who sought Mabali, grew fall and measured the Earth with his feet, could not be granted his gift. He is my uncut gem, always sweet to devotees. Those who do not hear of him have no ears at all, so we have heard.
