(2012)
நீள்ணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப்
பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை,
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை,
காணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே.
பதவுரை
|
நீள் நாகம் |
– |
நீண்ட வாஸுகி நாகத்தை |
|
சுற்றி |
– |
(கடைகயிறாகச்) சுற்றி |
|
நெடு வரை |
– |
பெரிய (மந்தர) மலையை |
|
நட்டு |
– |
(மத்தாக) நாட்டி |
|
ஆழ் கடலை |
– |
ஆழ்ந்த கடலை |
|
பேணான் |
– |
மதியாதவனாகி |
|
கடைந்து |
– |
கடைந்து |
|
அமுதம் |
– |
அம்ருத்த்தை |
|
கொண்டு |
– |
தேவர்கட்கு எடுத்துத்தந்து |
|
உகந்த |
– |
திருவுள்ளமுவந்த |
|
பெம்மானை |
– |
பெருமானும், |
|
ஆரம் பூண் மார்வனை |
– |
ஹாரங்களையணிந்த திருமார்பையுடையனும் |
|
புள் ஊரும் |
– |
பெரிய திருவடியை ஏறிச்செலுத்துகின்ற |
|
பொன்மலையை |
– |
பொன் மலைபோன்றவனுமான ஸர்வேச்வரனை |
|
காணாதார் |
– |
ஸேவிக்கப் பெறாதவர்களுடைய |
|
கண் |
– |
கண்களானவை |
|
என்றும் |
– |
ஒருநாளும் |
|
கண் அல்ல |
– |
கண்களே அல்ல |
|
கண்டாம் |
– |
(இதைநாம் நன்கு) அறிவோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
காணாதர் கண் என்றும் கண்ணல்ல-“காரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே? கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!.
கண்டாம் – கண்டோம்.
English Translation
Winding a long snake over a tall mountain stuck in the deep, the Lord churned the ocean with abandon and gave ambrosia to the gods with pleasure. He wears beautiful garlands on his chest and rides the Garuda bird. He is a mountain of gold, those who do not see him have no eyes at all, we are certain.
