(180)

(180)

தென்னிலங்கை மன்னன்சிரம்தோள் துணி செய்து

மின்னிலங் குபூண் விபீடண நம்பிக்கு

என்னிலங்கு நாமத்த ளவும் அரசென்ற

மின்னிலங் காரற்குஓர் கோல்கொண்டுவா வேங்கட வாணர்க்குஓர் கோல்கொண்டுவா.

பதவுரை

தென் இலங்கை

–

அழகிய லங்கைக்கு
மன்னன்

–

அரசனாகிய ராவணனுடைய
சிரம்

–

தலைகளையும்
தோள்

–

தோள்களையும்
துணிசெய்து

–

(அம்பினால்) துணித்துப் போகட்டு
மின் இலங்கு

–

ஒளிவீசுகின்ற
பூண்

–

ஆபரணங்களை அணிந்த
விபீடணன் நம்பிக்கு

–

விபீஷணாழ்வானுக்கு
ஏன் இலங்கு நாமத்து அளவும்

–

என்பெயர் ப்ரகாசிக்குமளவும்
அரசு

–

ராஜ்யம் (நடக்கக் கடவது)
என்ற

–

என்று அருள்செய்து
மின் இலங்கு ஆரற்கு

–

மின்னல்போல் விளங்குகின்ற ஹாரத்தையுடையவனுக்கு

ஓர் கோல் கொண்டுவா-;

வேங்கடம்

–

திருமலையில்
வாணற்கு

–

வாழ்ந்தருளுமவனுக்கு

ஓர் கோல் கொண்டுவா-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- துஷ்டர்களைத் தொலைத்தொழித்து சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக்கோல் கொண்டு வா என்பதாம்.  கொண்டு வாராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களையும் காக்கப்போவன் என்பது தொனிக்கும்.  தென் – அழகுக்கும் பேர். துணி – முதனிலைத் தொடர் மின்னலங்காரற்கு என்பதுமொருபாடம்; மின் – விளங்கார்  காரத்தை உடையவனுக் கென்று பொருள்:  மின்னிலங்காரர்கு என்பது செய்யுளின்பத்திற்குச் சிறக்குமென்க.  வாணன் – வாழ்நன்; மரூஉ.

English Translation

The Lord of Venkatam hills, the Lord wearing a radiant garland, felled the heads and arms of the Lanka’s king Ravana and gave the promised kingdom to his younger brother Vibhishana of excellent qualities. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top