(179)

(179)

மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்

மன்னன் மணிமுடி பத்தும் உடன்வீழ

தன்னிகரொன் றில்லாச்சிலைகால் வளைத்திட்ட

மின்னு முடியற்குஓர் கோல்கொண்டுவா வேலை யடைத்தாற்குஓர் கோல்கொண்டுவா.

பதவுரை

மின்

–

மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான)
இடை

–

இடையையுடைய
சீதை பொருட்டா

–

ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக
இலங்கையர் மன்னன்

–

லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான  ராவணனுடைய
மணிமுடி பத்தும்

–

ரத்நகிரீடமணிந்த தலைகள் பத்தும்
உடன் வீழ

–

ஒருசேர அற்றுவிழும்படி
தன்நகர் ஒன்று இல்லா

–

தனக்கு ‘மாநமானதொன்று மில்லாத (உயர்ந்த)
சிலை

–

வில்லை
கால் வளைத்து இட்ட

–

கால்வளையும்படி பண்ணி ப்ரயோகித்த
மின்னும் முடியற்கு

–

விளங்கா நின்ற கிரீடத்தை அணிந்தவனுக்கு
வேலை அடைத்தாற்கு

–

ஸமுத்ரத்தில் ஸேது கட்டினவனுக்கு

ஓர் கோல் கொண்டுவா-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிராட்டியை மீட்டுக் கொணர்வதற்காகக் கடலிலே அணைகட்டி இலங்கை சென்று இராவணனை யழித்தவனான இவனுக்குக் கோல் கொண்டு வா என்பதாம்.

English Translation

The radiant-crown Lord build a bridge over the ocean and wielded his bow to fell the ten heads of Lanka’s king Ravana, for the sake of his thin-waisted Sita. O Raven! Go fetch him a grazing staff.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top