(1789)
தாதவிழ் மல்லிகை புல்லிவந்த தண்மதி யினிள வாடையின்னே
ஊதை திரிதந் துழறியுண்ண ஓரிர வுமுறங் கேன் உறங்கும்
பேதையர் பேதைமை யாலிருந்து பேசிலும் பேசுக பெய்வளையார்
கோதை நறுமலர் மங்கைமார்வன் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
பதவுரை
|
தாது அவிழ் மல்லிகை |
– |
தாதுகள் விரிகிற மல்லிகைகளிலே |
|
புல்கி |
– |
போய் அணைந்து |
|
தண் மதியின் |
– |
குளிர்ந்த சந்தியனோடுகூட |
|
இன்னே வந்த |
– |
இப்படிவந்து வீசுகின்ற |
|
இளவாடை |
– |
மந்தமாருதமாகிற |
|
ஊதை |
– |
குளிர்காற்றானது |
|
திரிதந்து |
– |
இங்குமங்கும் உலாவி |
|
உழறி உண்ண |
– |
துகைத்துமுடிக்க |
|
ஓர்இரவும் |
– |
ஒரு ராத்திரியும் |
|
உறங்கேன் |
– |
உறங்காதிருக்கிறேன்; |
|
பெய் வளையர் |
– |
கைவளை கழலாதவர்களாய் |
|
உறங்கும் பேதையர் |
– |
உறக்கமே போதுபோக்கான விவேகமற்ற பெண்கள் |
|
பேதைமையால் |
– |
தங்கள் அறிவீனத்தினால் |
|
இருந்து |
– |
வேலையற்றறிருந்து |
|
பேசிலும் பேச்சு |
– |
(என் விஷயமாக) என்ன பழி சொன்னாலும் சொல்லட்டும்; |
|
(தோழிமார்களே!) |
||
|
கோதை |
– |
கூந்தலிலே |
|
நறுமலர் |
– |
மணமிக்க பூக்களை அணிந்துள்ள |
|
மங்கை |
– |
மணம்மிக்க பூக்களை அணிந்துள்ள |
|
மார்பன் |
– |
திருமார்பிலேயுடைய பெருமானது |
|
குறுங்குடிக்கே *** மின். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மலர்கின்ற மல்லிகைப் பூவிலே தோய்ந்து அங்குள்ள மணம் முதலியவற்றை வாரிக்கொண்டு இங்கே வந்து வீசித் திரிகின்ற குளிர்காற்றானது என்னுயிரை முடிக்கப் பார்க்கின்றது; அதற்கு வருந்தி ஓரிரவும் கண்ணுறங்காதிருக்கின்றேன்; நாயகரைப் பிரிந்தாலுண்டாகும் வருத்தம் இப்படியிருக்குமென்று அடியோடு அறியாத சில பேதைப்பெண்கள் தாங்கள் போதுபோக்கற்று நம்மைப் பற்றிப் பழிப்பாக எது சொல்லினும் சொல்லுக; அவர்கள் பேச்சைக்கொண்டு நமக்கு என்ன? நம்முடைய ப்ராவணத்தைக் குற்றமாகக் கொள்ளாமல் நற்றமாகக் கொள்பவன் வாழ்கிற திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்கிறாள்.
இன்னே – இங்ஙனே என்றபடி; வாடை நலிகிறபடியை வாய்விட்டுச் சொல்லமாட்டாமையாலே ;இன்னே; என்னுமித்தனை. ஊதை – குளிர்காற்று; “ஊதையும் கூதையும் குளிர்பனிக்காற்று; என்பது நிகண்டு.
English Translation
The cold and damp moonlight breeze, laden with fragrance of pollen-filled, Jasmine blows everywhere, desiccating my soul, leaving me not a single night;s sleep. Let the insensitive bangled sleepers sit here and speak what inanities they wish to> The Lord keeps the fragrant coiffured lotus-dame Lakshmi on his chest. Carry me now to his abode in kurungudi
