(1737)

(1737)

செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்

கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை

இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்,

வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே.


பதவுரை

கரு

கர்ப்பத்தில்

நீர்

நீர்கொண்ட

முகில்

மேகம் போன்ற

வண்ணன்

திருநிறத்தையுடையரான

கண்ணபுரத்தானை

சௌரிப்பெருமாள் விஷயமாக,-

செரு நீர வேல் வலவன்

யுத்தம் செய்வதையே இயல்வாக வுடைய வேற்படையைப் பிரயோகிக்கவல்லவரும்

மங்கையர் கோன்

திருமங்கையிலுள்ளார்க்கு அரசருமான

கலிகன்றி

ஆழ்வார் (அருளிச்செய்த)

இரு நீர்

மிக்க நீர்மையையுடைய

இன் தமிழ்

இனிய தமிழினாலாகிய

இன் இசை

இனிய இசையையுடைய

இவை மாலைகள் கொண்டு

இச்சொல் மாலைகளைக் கொண்டு

தொண்டீர்

தொண்டர்களே!

வரு நீர் வையம் உய்ய

கடல் சூழ்ந்த உலகம் உஜ்ஜீவிக்கும்படி

பாடி

வாயாரப்பாடி

ஆடுமின்

மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கூத்தாடுங்கள்

.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பகவத்பக்திமிகுந்து தொண்டர்களென்று பெயர் பெற்றவர்களை விளி்த்து, நீங்கள் இத்திருமொழியைப் பாடியாடுங்கோள்; உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும் – என்றாராயிற்று.

வருநீர்வையம் – கடல் சூழ்ந்த பூமியிலே, உய்ய – நீங்கள் உஜ்ஜீவிக்கும்படி, இவைபாடி யாடுமின் என்னவுமாம்.

 

English Translation

This is a garland of sweet Tamil songs sung with feeling by sharp-spear-wielding Mangai-king kalikanri on the Lord of kannapuram, dark as the water lily.  Devotees! sing them and dance let the ocean-girdled Earth be filled with joy.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top