(1735)

(1735)

கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே

பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை

வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்

பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே.

 

 

பதவுரை

கற்றார்

விவேகிகள்

பற்று அறுக்கும்

‘இதன் ஸம்பந்தமே நமக்கு வேண்டா’ என்று வெறுத்து ஒழிக்கும்படியான

பிறவி பெருகடலே

ஸம்ஸாரமாகிற பெரிய கடலையே

பற்றா

போக்யமாகப் பற்றி

அடியேன் வந்து பிறந்தேன்

(இந்நிலத்திலே) அடியேன் வந்து (பலபிறப்பும்) பிறவாநின்றேன்

பிறந்த பின்னை

இப்படி பிறந்து வருமடைவிலே,

வற்றா நீர் வயல் சூழ்

ஒருகாலும் வற்றாத நீர்வளமுடைய கழனிகளாலே சூழப்பட்ட

வயலாலி

‘வயலாலி’ என்றேபெயர் பெற்ற திருவாலியில் எழுந்தருளியிருக்கிற

அம்மானை

எம்பெருமானை

பெற்றேன்

ப்ராப்தனானேன்,

பெற்றதுவும்

அவனைப்பெற்றவாறே

பிறவாமை பெற்றேன்

மறுபிறப்பில்லாமை பெற்றேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தன்னை மறக்கமுடியாதபடி எம்பெருமான் உமக்குப் பண்ணித்தந்த உபகாரந்தான் ஏதென்ன, தன்னுடைய அநுபவத்துக்கு இடையூறு வராதபடி பண்ணித்தந்த மஹோபகாரகனன்றோ வென்கிறார்.

“பிறவாமைப் பெற்றேனே” என்பதற்குப் பலபடி பொருளருளிச் செய்வர்; பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானங் காண்மின் – “இப்பேற்றுக்கு விச்சேதத்தைப் பண்ணக்கடவ ஜன்மம் மறுவலிடாதபடி பெற்றேனென்னுதல்; அன்றிக்கே இப்பேற்றுக்கடியாக என்பக்கல் ஒரு நன்மை பிறவாதிருக்கச் செய்தே பெற்றேனென்னுதல்; அங்ஙனுமன்றிக்கே, பெற்றேனென்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாதபடி பெற்றேனென்னுதல்.  உபகாரஸ்ம்ருதி அநுவர்த்தித்தவன்று ப்ரத்யுபகாரம் தேடி நெஞ்சாறல்பட வேண்டும்படி யிருக்குமிறே; அது வேண்டாதே ‘ப்ராப்தம் இது’ என்றிருக்கும்படி உபகரித்தானாயிற்று.” என்று. இனிப் பிறப்பில்லாமையைப் பெற்றேன் என்பது முதல் அர்த்தம்; (என்னிடத்தில் ஒரு ஹேதுவும்) பிறவாமல் பேறுபெற்றேன் என்பது இரண்டாவது அர்த்தம்; நன்றியறிவும் பிறவாமலே பேறுபெற்றேன் என்பது மூன்றாவது அர்த்தம்.

 

English Translation

I took birth in a vast ocean of nescience, with no love for the learned ones.  Then when I was born again, the Lord of fertile Vayalali gave me his grace, and freed me from rebirth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top