(1706)
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக,
வன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன்,
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து,
கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
பதவுரை
|
குன்றால் |
– |
கோவர்த்தன மலையினால் |
|
மாரி |
– |
பெருமழையை |
|
பழுது ஆக்கி |
– |
பயனற்றதாம்படி செய்தவனும் |
|
அன்று |
– |
முன்பொருகால், |
|
கொடி ஏர் இடையாள் பொருட்டாக |
– |
கொடிபோன்று அழகிய இடையை யுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக |
|
வல் தாள் ஏழ் விடை |
– |
வலிய கால்களையுடைய ஏழு ரிஷபங்களை |
|
அடர்த்த |
– |
வலியடக்கினவனும் |
|
வானோர் பெருமான் |
– |
நித்யஸூரிகளுக்குத் தலைவனும் |
|
மா மாயன் |
– |
ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனும் |
|
பஞ்சவர்க்கு ஆய் |
– |
பஞ்சபாண்டவர்களுக்காக |
|
தூது சென்றான் |
– |
(துரியோதனன் பக்கல்) தூது சென்றவனும் |
|
திரி கால் சகடம் |
– |
ஊர்ந்து செல்லுங்காலையுடைய சகடத்தின் |
|
சினம் |
– |
பகையை |
|
அழித்து |
– |
அழித்தவனும் |
|
கன்றால் |
– |
வத்ஸாஸுரனைக் கொண்டு |
|
விளங்காய் எறிந்தான் |
– |
கபித்தாஸுரன்மேல் வீசியெறிந்து இருவரையும் முடித்தவனுமான பெருமானுடைய |
|
ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-. |
||
English Translation
The Lord of gods, the wonder Lord who stopped the rains with a mount and destroyed seven bulls for the stender-waisted Nappinnai, who went as a messenger for the kings, who smote a cart with his foot, who threw a calf against a wood-apple tree –resides in kannapuram Let us offer worship.
