(1661)

(1661)

உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,

பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்,

கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்

வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ.

 

பதவுரை

உண்ணும் நாள் இல்லை

இவள் ஒருநாளும் உண்பதில்லை;

உறக்கம் தானும் இல்லை

கண்ணுறங்குவது மில்லை;

பெண்மையும் சால நிறைந்திலள்

நன்றாக முதிர்ந்த பெண்மைப் பருவமுடையளல்லள்;

பேதை தான்

இளம் பெண்தான்; (இப்படியிருக்கச் செய்தேயும்)

கண்ணன் ஊர்

எம்பெருமானுடைய திவ்யதேசமாகிய

கண்ணபுரம்

திருக்கண்ணபுரத்தை

தொழும்

தொழாநின்றாள்;

இவட்கு எண்ணம்

இவளுடைய எண்ணம்

கார் கடல் வண்ணர்மேல்

கரிய கடல் போன்ற நிறத்தை யுடையரான சௌரிப் பெருமாள் மேலுள்ளது;

இது என் கொல்

இது என்ன ஆச்சரியம்!,

 

English Translation

No day is a day of non-fasting for her, no night is a night no-vigil.  She is just a child barely into her maidenhood, yet she keeps saluting her Krishna’s abode of kannapuram.  He thoughts are always on the dark-ocean-huel Lord. Woe! what is all this?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top