(1660)
அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்,
பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள், உள்மெலிந் தாள்இது வென்கொலோ.
பதவுரை
| இவள் |
– |
இப்பரகாலநாயகியானவள் |
| அருவி சோர் வேங்கடம் |
– |
அருவிகள் சொரிகின்ற திருமலையென்றும் |
| நீர்மலை என்று |
– |
திருநீர்மலையென்றும் சொல்லி |
| வாய் வெருவினாள் |
– |
வாய் பிதற்றினாள்; |
| மெய்யம் வினவி |
– |
திருமெய்யத்தைப் பற்றிக் கேள்விகேட்டு |
|
(அதற்கு ஒருவரும் பதில் சொல்லுவாரில்லாமை யாலே) |
||
| இருக்கின்றாள் |
– |
வாளாவிருக்கிறாள்; |
| பெருகு சீர் |
– |
சீர்மை மிகுந்த |
| கண்ணபுரம் என்று |
– |
திருக்கண்ணபுரம் என்று |
| பேசினாள் |
– |
வாயாற் சொன்னவளாய்க் கொண்டு (உடனே) |
| உருகினாள் |
– |
நீர்ப்பண்டமானாள்; |
| உள் மெலிந்தாள் |
– |
நெஞ்சி சிதிலகமாகப் பெற்றாள்; |
| இது என் கொல் |
– |
இப்படியுமொரு நிலைமை யுண்டாகக் கடவதோ?. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பரகாலநாயகியை நோக்கி ஹிதமாக நான் ஏதேனுஞ் சொன்னால் அதை இவள் செவியேற்பதுமில்லை, அதற்கு மறுமொழி கூறுவதுமில்லை; ‘திருவேங்கடம்’ ‘திருநீர்மலை’ என்றே இவள் எப்போதும் வாய்வெருவிக் கொண்டிரா நின்றாள்; சிலஸமயங்களில், ‘திருமெய்யம்’ என்றொரு திவ்யதேச மிருக்கிறதே, அதற்கு ‘மெய்யம்’ என்று ஏன் திருநாமம் வந்தது? அடியவர்கட்கு மெய்யே நின்று காரியம் செய்தவிடம் என்கிற காரணத்தினாலோ அத்திருப்பதிக்கு அத்திருநாமமுண்டாயிற்று?’ என்ற அருகிலுள்ளாரைக் கேட்கிறாள்; இதற்கு மறுமொழி கூறுவார் ஆருமில்லாமையாலே பெருமூச்சுவிட்டு வாளாவிருக்கின்றாள். சிலஸமயங்களில் ‘திருக்கண்ணபுரம்’ என்று வாய்நிறையப் பேசினவாறே அந்த க்ஷணத்திலேயே நீர்ப்பாண்டமாய் உருகுகின்றாள்; நெஞ்சு தளர்கின்றாள் இப்படி இவள் ஆவதற்கு என்பாபம் தவிர வேறு என்ன காரணமோ அறிகின்றிலேன் என்றாளாயிற்று.
English Translation
She blabbered incoherently about cool-streams-Venkatam and waterlogged-Nirmalai. She inquired about Meyyam, and spoke about wealthy kannapuram. She melts into tears and grows thinner inside day by day. Alas, what is this leading to?
