(1642)

(1642)

ஏற்றி னையிம யத்துளெம் மீசனை இம்மை யைமறு மைக்கு மருந்தினை,

ஆற்றலை அண்டத் தப்புறத் துய்த்திடும் ஐய னைக்கையி லாழியொன் றேந்திய

கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,

காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

 

பதவுரை

ஏற்றினை

காளைபோல் செருக்குடையவனும்

இமயத்துள் எம் ஈசனை

இமயமலைத் திருப்பிரிதியிலெழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியும்

இம்மையை

இஹலோகத்ததுப் பலன்களை யளிப்பவனும்

மறுமைக்கு மருந்தினை

பரலோகபுருஷார்த்தத்திற்கு ஸாதனமாயிருப்பவனும்

ஆற்றலை

பரிபூர்ணசக்தியே வடிவெடுத்தது போலிருப்பவனும்

அண்டத்து அப்புறத்து

அண்டங்களுக்கு அப்பாலுள்ள பரமபதத்தில்

உய்த்திடும்

(அன்பர்களைச்) செலுத்தவல்ல

ஐயனை

ஸ்வாமியும்

கையில்

திருக்கையில்

ஒன்று ஆழி

ஒப்பற்ற திருவாழியை

ஏந்திய

தரித்துக்கொண்டுள்ளவனும்

கூற்றினை

(எதிரிகட்கு) யமன் போன்றவனும்,

குரு மா மணி குன்றினை

சிறந்த நீலமணிமயமான மலைபோன்றவனும்

நின்றவூர் நின்ற நித்திலம் தொத்தினை

திருநின்றவூரி லெழுந்தருளி யிருக்கிற முத்துத்திரள் போன்றவனும்

காற்றினை

காற்றுப்போல் ஸுகமளிப்பவனும்

புனலை

தண்ணீர்போல் உயிர்தரிக்கச் செய்பவனமான பெருமானை

சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நித்யாநந்தத்தினால் காளைபோல் மேனாணித்திருக்குமவன்; இமயமலையில் திருப்பிரிதியென்னுந் திருப்பதியிலிருக்கு மிருப்பைக்காட்டி என்னை வசப்படுத்திக் கொண்டவன்; இஹலோகத்துப் பலன்களாகிய க்ஷேத்ரபுத்ர களத்ராதிகளையும் ஸ்வர்க்க லோகத்துப் பலன்களையும் விரும்புவார்க்கு அளிக்க வல்லவன்; இதற்குறுப்பாக ஸர்வ சக்தியுக்தன் : தான் விரும்பின வ்யக்திகளைப் பரமபதத்திலே கொண்டு வைக்க வல்லவன்; கையிலே திருவாழி கொண்டு வியாபாரிக்குந் திறத்தினால் எதிரிகட்கு யமன் போன்றவன்; சிறந்த நீலமணிமயமான பர்வதம் போன்ற வடிவையுடையவன்; திருநின்றவூரிலே முத்துத் திரள்போலே தாபஹரமான வடிவுகொண்டெழுந்தருளியிருப்பவன்; ஸ்பரிசத்தாலே பரமசுகமளிக்குங் காற்றுப்போலே விரும்பத் தகுந்தவன்; தண்ணீர்போலே உயிர்தரி்ப்பதற்கு ஹேதுவாயள்ளவன்; ஆக இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றேன்.

 

English Translation

The bull, the Lord of celestials, the medicine for the life here and hereafter, the companion for the journey beyond this world, the wielder of the fierce discus, the radiant gem-mountain, the Lord of Tiruninravur, the heap of peals, the wind, the waters, – I sought and found him in Kannamangai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top