(1641)
பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத் தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,
மாய னைமதிள் கோவலி டைகழி மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள் ஈசனை,
இலங் கும்சுடர்ச் சோதியை எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை
காசி னைமணி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
பதவுரை
|
பேய் முலைத்தலை நஞ்சு உண்ட பிள்ளையாய் |
– |
பேய்ச்சியாகிய பூதனையுடைய முலையிடத்துண்டான விஷத்தை அமுது செய்த சிறுவனும், |
|
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை |
– |
தெளிந்த ஞானிகளால் ஆச்ரயிக்கப்படுகின்ற தெய்வமாயிருப்பவனும் |
|
மாயனை |
– |
ஆச்சரியனும் |
|
மதிள் கோவல் இடைகழி மைந்தனை |
– |
திருமதிளை யுடைய திருக்கோவலூரிலே இடைகழியிலுறைகின்ற யுவாவானவனும் |
|
அன்றி |
– |
தவிரவும் |
|
அந்தணர் |
– |
அந்தணர்களினுடைய |
|
சிந்தையுள் |
– |
மனத்திலேயிருந்து கொண்டு |
|
ஈசனை |
– |
அவர்களை நியமிப்பவனும் |
|
இலங்கும் சுடர் சோதியை |
– |
ஒளிபெற்று விளங்குகின்ற பெருஞ் சோதிமயமாயிருப்பவனும். |
|
எந்தையை |
– |
எனக்கு ஸ்வாமியம் |
|
எனக்கு எய்ப்பினில் வைப்பினை |
– |
எனக்குத் தளர்த்தி வருங்காலத்தில் (உதவக் கூடிய) நிதி போன்றவனும் |
|
காசினை |
– |
பொன் போன்றவனும் |
|
மணியை |
– |
ரத்னம் போன்றவனுமான எம்பெருமானை |
|
சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பூதனையினுடைய முலைத்தடத்துண்டான விஷத்தை அமுதுசெய்த சிறு குழந்தை யெனினும் தெள்ளியார் பலர் கைதொழுந்தேவனாயிருப்பவன்; திருக்கோவலிடை கழியில் முதலாழ்வார்களோடு நெருக்கிக் கலந்து நித்யயுவாவா யிருக்குமவன்; அந்தணர்களின் சிந்தையிற் புகுந்து அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டிருக்கிறவன்; இவர்களுடைய சரீரத்தில் உறைந்திருக்கச் செய்தேயும் அதிலுள்ள தோஷங்கள் தன் பக்கலில் தட்டாமல் ஔஜ்ஜ்வல்யமே வடிவாயிருப்பவன்; இப்படிப்பட்ட தன்மையைக் காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவன்; தளர்ந்த காலத்து உதவும் நிதிபோலே ஆபத்பந்துவாயிருக்குமவன்; பொன்னும் மணியும் போலே விரும்பத்தகுந்தவன்; ஆக இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றே னென்றாராயிற்று.
English Translation
The child who sucked the poisoned breast of the ogress, the God worshipped by clear thinking seers, the prince who appeared in the vestibule of Tirukkovolur, the Lord residing in the heans of Vedic seers, the radiance of their beings, my father, my protector, my wealth, my gem, – I sought and found him in Kannamangai.
