(145)
முலையேதும் வேண்டேனென் றோடிநின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்துகல் மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய்
சிலையொன்று இறுத்தாய் திரிவிக் கிரமா திருவாயர் பாடிப் பிரானே
தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே.
பதவுரை
| முலை |
– |
‘முலையையும் |
| ஏதும் |
– |
(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும் |
| வேண்டேன் |
– |
(நான்) விரும்பமாட்டேன்’ |
| என்று ஓடி |
– |
என்று சொல்லி ஓடிப்போய் |
| நின்காதில் கடிப்பை |
– |
(நான்) உன் காதிலிட்ட காதணியை |
| பறித்து எறிந்திட்டு |
– |
பிடுங்கி யெறிந்துவிட்டு |
| மலையை |
– |
கோவர்த்தனமலையை |
| எடுத்து |
– |
(குடையாக) எடுத்துத் தூக்கி |
| மகிழ்ந்து |
– |
திருவுள்ளமுகந்து |
| கல்மாரி |
– |
கல்வர்ஷத்தில் நின்றும் |
| காத்து |
– |
(இடையர் முதலானாரை) ரக்ஷித்து |
| பசுநிரை |
– |
பசுக்களின் திரளை |
| மேய்த்தாய் |
– |
மேய்த்தவனே! |
| ஒன்று சிலை |
– |
ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை |
| முறித்தாய் |
– |
(பிராட்டியை மணம்புரிய) முறித்தவனே! |
| திரிவிக்கிரமா |
– |
த்ரிவிக்ரமனே! |
| திருஆயர்பாடி |
– |
திருவாய்ப்பாடிக்கு |
| பிரானே |
– |
உபகாரகனே! |
| தலைநிலா போதே |
– |
தலைநிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே |
| உன் காதை பெருக்காது |
– |
உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல் |
| விட்டிட்டேன் |
– |
விட்டுவைத்தேன்; |
|
(அப்படி விட்டு வைத்தது) |
||
| குற்றமே அன்றே |
– |
என்னுடைய அபராதமன்றோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கண்ணனைப் பலவிதமாகப் புகழ்ந்து யசோதை முலையுண்ணச் சொன்னது அவனும் அப்படியே முலையுண்ணத் தொடங்க அப்போது யசோதை அவன் காதில் கடிப்பை இட்டமாளாக கண்ணன் மிகவும் கோபித்து ‘நீ கொடுக்கும் முலையும் வேண்டா ஒன்றும் வேண்டா’ என்று சொல்லி அவளுக்குப் பிடாமல் அப்பால் ஓடிச்சென்று காதிலிட்ட காதணியையும் பிடுங்கி எறிந்துவிட்டனனாக யசோதை மறுபடியும் பலவிதமாகப் புகழ்ந்துகொண்டு காதில்கடிப்பை இடப்போகையில் அவன் இசையாமலிருக்க யசோதையானவள் ‘அப்பா! உன்மேல் ஒரு குற்றமுமில்லை; தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டிட்டது என்னுடைய குற்றமேகாண்’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.
English Translation
O Trivikrama, You happily lifted a mountain against hailstones and protected the grazing cows! You broke a bow for Sita, you strode the Earth as the manikin. O Master of the cowherd-clan! You run away saying, “I don’t want any suck”. You pluck the ear-pendants and throw them away. It is my mistake, I did not bore your ears earlier when your neck was still supple.
